|
என
என்றது, ‘இனியது
விஞ்சின இடங்களில் மிகவும் ஆழங்காற்படுகைக்கு உடலாமித்தனை அன்றோ?’ என்றபடி.
ஓர் அவதாரத்தைச்
சொன்னால், 1‘எத்திரம்!’ என்று ஈடுபடுகின்றவர், பல அவதாரங்களைப் பொறுக்க மாட்டார்
அன்றோ?அதனால், ‘பல’ என்கிறார். ‘கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பிறவிக்கு எல்லை
காண்கின்றோம்; கர்மங்கட்குக் கட்டுப்படாதவன் பிறவிக்கு எல்லை காண்கின்றிலோம்,’ என்பார்,
‘பலபல’ என்கிறார். தன்னுடைய பிறவிகளைத் தானே சொல்லப் புக்காலும் 2‘பஹூநி
- பல’ என்னும்படி அன்றோ இருக்கிறது? ஆக, கர்மம் காரணமாக வரும் பிறவிகட்கு எல்லை உண்டு; திருவருள்
காரணமாக வரும் பிறவிக்கு எல்லை இல்லை,’ என்றபடி. அன்றிக்கே, ‘தேவர்கள் முதலான பிறவி பேதங்களையும்
3அவாந்தர பேதங்களையும் கருதிப் ‘பலபல’ என்கிறார்,’ என்னலுமாம். தோன்றுகிற
அளவேயன்றி, கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் பத்து மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தால்,
4‘பிறகு பன்னிரண்டாவது மாதமாகிய சித்திரை மாதத்தில் நவமி திதியில் ஸ்ரீராமனைப் பெற்றாள்’
என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து வந்து அவதரித்தானாதலின்,
‘செய்து’ என்கிறார். 5‘பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட அப்பாங்கினால்’
என்றார்கள் அன்றோ பெற்றவர்களும்?
அன்றிக்கே,
6‘உலகிற்கு எல்லாம் தமப்பனான சர்வேசுவரன், தனது ஒவ்வொரு பிறவியிலும் தன் புத்திரர்களைத்
தான் தமப்பனாக உடையவனாய் இருக்கிறான்; அந்தச் சர்வேசுவரனுடைய அவதாரத்தின் பெருமையை அறிவில்லாதவர்கள்
அறியார்கள்,’ என்கிறபடியே, ‘எல்லாப் பொருள்கட்கும் காரணனாய் இருக்கின்ற தான் தன்னுடைய
காரியங்களிலே ஒரு பொருளுக்குத் தான் காரியமாக வந்து அவதரிக்கின்றான்,’ என்பார்,
‘செய்து’ என்கிறார் என்னலுமாம்.
வெளிப்பட்டு -
7‘கண்களுக்குக் காணப்படுமவன் அலன்’ என்கிற தன்னைக் கண்களுக்கு விஷயமாக்கி. என்றது,
‘இச்
____________________________________________________
1.
திருவாய். 1. 3 : 1.
2.
ஸ்ரீ கீதை, 4 : 5.
3. அவாந்தர பேதங்கள் -
நடுவில் வருகின்ற பிறவி பேதங்கள்.
4.
ஸ்ரீராமா.
பால.
5.
பெரியாழ்வார்
திருமொழி. 3. 2 : 8.
6.
காடகம், 3 : 9.
7. முண்டகோபநிடதம், 3 : 1.
|