|
சர
சரீரத்தோடு சம்பந்தம்
இல்லாத கண்களாலே எப்பொழுதும் காணக்கூடிய வடிவை ஊன் கண்களுக்கு விஷயமாக்கிக் கொண்டுவந்து காட்டுகை.
1‘என்றேனும், கட்கண்ணாற் காணாத அவ்வுருவை’ அன்றோ கண்ணுக்கு இலக்கு ஆக்கினான்?’
என்றபடி. 2‘எப்போதும் செல்லுகிற இடத்தில் நிதி கண்டு எடுப்பாரைப் போன்று, இவ்வுலக
சம்பந்தம் இல்லாத திவ்விய திருமேனியை இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கி வந்து அவதரிக்கின்றான்’
என்பார், ‘வெளிப்பட்டு’ என்கிறார். சங்கொடு சக்கரம் வில் ஒண்மையுடைய உலக்கை ஒள்
வாள் தண்டு கொண்டு - இதனால், 3அவதரிக்கும்போது திவ்விய ஆயுதங்களோடே வந்து
அவதரிக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி.
4‘ஸ்ரீ
சத்துருக்நாழ்வான், அப்போது தாய் மாமனான யுதா ஜித்தினுடைய வீட்டிற்குச் செல்லுகின்ற ஸ்ரீ பரதாழ்வானால்
அழைத்துச் செல்லப்பட்டார்,’ என்கிறபடியே, இறைவனை விட்டுப் பிரியாத ஒற்றுமையைத் தெரிவிப்பார்,
‘சங்கொடு’ என்கிறார். ‘நல்லாரைக் காத்தற்கும் பொல்லாரைப் போக்கற்கும் சங்கு
ஒன்றே போதியதாக இருக்க, சக்கரத்தையும் கொண்டு வந்தான்’ என்பார், ‘சங்கொடு சக்கரம்’
என்கிறார். ஒரு கொத்துக்கு ஒருவரைக் கொண்டு வருதலோடு அமையாது, வில்லையும் கொண்டுவந்தானாதலின்,
‘சக்கரம் வில்’ என்கிறார். கருதும் இடம் பொரும்படி ஞானத்தாலே மேம்பட்டிருப்பவர்களாதலின்,
‘ஒண்மையுடைய உலக்கை’ என்கிறார். ஒண்மை - அறிவு.
5கையில்
திவ்விய ஆயுதங்களைக் கண்டால், ‘இவற்றைப் போருக்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்,’
என்று
____________________________________________________
1.
பெரிய திருவந் 28.
2. ‘வெளிப்பட்டு’ என்பதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘எப்போதும்
செல்லுகிற இடத்தில்’ என்று தொடங்கி.
3. முதற்பத்து, எட்டாந்திருவாய்மொழி,
ஒன்பதாம் பாசுரம் வியாக்கியானம்
பார்க்க.
4.
ஸ்ரீராமா. அயோத். 1 : 1.
5. வாளுக்குரிய அடையாகிய
‘ஒள்’ என்பதனை மற்றை ஆயுதங்கட்கும்
கூட்டி, அதனாற்போந்த பொருளை அருளிச்செய்கிறார்,
‘கையில் திவ்விய
ஆயுதங்களை’ என்று தொடங்கி. ஆக, ‘ஞானாதிகருமாய் அழகியாருமாய்
இருப்பர்’
என்றபடி.
|