முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
363

1முதல

    1முதலிலே சமுசாரிகளைப் போன்று அறியாதொழிதல், அவதரித்துக் கண்ணுக்கு இலக்காய்ப் பாசுரமிட்டுப் பேச நிலமன்றிக்கே இருத்தல், சிசுபாலன் முதலியோர்களைப் போன்று ‘நம்மிலே ஒருவன்’ என்று தாழ்வாகப் பேசி முடிந்து போதல். ஸ்ரீ விஸ்வரூபத்தில் அருச்சுனனைப் போன்று நீச்சு நீராதல் இன்றிக்கே இறைவனைப் புகழ்ந்தவர் ஆதலின், ‘ஓர் குறைவிலன்’ என்கிறார். அன்றிக்கே, 2‘அவன் எல்லா விதமான கல்யாண குணங்களை பரமாத்துமாவோடு கூட அனுபவிக்கின்றான்,’ என்கிறபடியே, ‘பரமபதத்திலே அனுபவிக்கக் கூடிய குணங்களின் அனுபவத்தை இங்கே அனுபவிக்கப்பெற்ற எனக்குப் ‘பரமபதத்திற் போகப்பெற்றிலேன்’ என்ற குறை உண்டோ?’ என்கிறார் என்னுதல்.

(1)

323

        குறைவுஇல் தடம்கடல் கோள்அரவு ஏறித்தன்
            கோலச்செந் தாமரைக்கண்
        உறைபவன் போலஓர் யோகுபுணர்ந்த ஒளிமணி
            வண்ணன் கண்ணன்
        கறைஅணி மூக்குடைப் புள்ளைக் கடாவி
            அசுரரைக் காய்ந்தஅம்மான்
        நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்
             யான்ஒரு முட்டுஇலனே.

   
பொ-ரை : ‘குறைவு இல்லாத பெரிய பாற்கடலிலே வலிமை பொருந்திய ஆதிசேடன்மேல் ஏறி, தனது அழகிய செந்தாமரை மலர் போன்ற கண்களாலே உறங்குகிறவனைப் போன்று ஒப்பற்ற யோகத்தைக் கூடிய, ஒளியையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான், கறை தோய்ந்த மூக்கையுடைய கருடப் பறவையைச் செலுத்தி அசுரரைக் கொன்ற அம்மான், அவனுடைய நிறைந்த புகழை ஏத்தியும் பாடியும் ஆடியும் செல்கின்ற நான் ஒரு தடையினை உடையேன் அல்லேன்,’ என்கிறார்.

    வி-கு :
‘ஏறிப் புணர்ந்த வண்ணன்’ என்றும், ‘கடாவிக் காய்ந்த அம்மான்’ என்றும் கூட்டுக. ‘பொருள் சேர் புகழ்’ ஆதலின், ‘நிறைபுகழ்’ என்கிறார்.

____________________________________________________

1. ஓர் குறைவிலன்’ என்கையாலே உண்டாகக்கூடிய குறைகளைக்
  காட்டுகிறார், ‘முதலிலே’ என்று தொடங்கி. நீச்சு நீராவது, தரை காண
  ஒண்ணாமை. நீச்சு நீர் - நீந்துகிற நீர்.

2. ஆனந்த வல்லி, 1 : 2.