|
தன
தன் கோலம் செந்தாமரைக்கண்
உறைபவன் போல - 1வெறும்புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய், எல்லாச் செல்வங்கட்கும்
அறிகுறியாய், பெரிய பிராட்டியாருடைய கலவியால் வந்த ஆனந்தத்திற்கு அறிகுறியாய், அப்போது
அலர்ந்த செவ்வித்தாமரையை உவமை சொல்லலாம்படி அழகியதாய்ச் சிவந்து இருந்துள்ள திருக்கண்கள்.
கண் உறைகை - கண் வளர்ந்தருளுகை. என்றது, கண்ணுறங்குதல் என்று பேராய், உலகத்தைக் காக்கும்
சிந்தனையோடு கூடியவனாய் இருத்தல். ஓர் யோகு புணர்ந்த - ‘எல்லா ஆத்துமாக்களும் நம்மைக் கிட்டிக்
கரைமரம் சேர்தற்கு உரிய விரகு யாதோ?’ என்று இவற்றைக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தல்;
அன்றிக்கே, இப்படிக் காத்தலுக்கு உரிய வழியைச் சிந்தை செய்தவாறே அந்நினைவு பொறாமையாலே
நாக்கு உலரும்; அப்போது, கர்ப்பூரத் திரள் வாயிலே இடுவாரைப் போலே 2‘வாசுதேவனாகிய
தன்னைச் சிந்தித்துக் கொண்டு’ என்கிறபடியே, தன்னைத்தானே சிந்திப்பான்; ‘அவ்வாறு சிந்தித்தலைக்
கூறுகிறார்’ என்னலுமாம். இப்படித் தன்னைத் தானே நினைத்தவாறே காத்தற்கு உரிய உபாயம் தோன்றுமே?
தோன்றினவாறே கண்ணனாய் அவதரித்தான் என்கிறார் மேல்:
ஒளி மணி வண்ணன் கண்ணன்
- ஒளியையுடைய நீலமணி போலே இருக்கிற வடிவையுடைய கிருஷ்ணன். ‘காக்கப்படும் பொருள்களைத் தன்
வடிவழகாலே கரைமரம் சேர்க்கைக்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன்’ என்றபடி. 3‘ஆட்கொள்ளத்
தோன்றிய ஆயர்தம் கோ’ என்றார் பட்டர்பிரானும். கறை அணி புள்ளைக் கடாவி - பகைவர்களைக்
கொன்று, கறை கழுவக் காலம் இல்லாது இருத்தலின் கறை ஏறி அதுவே ஆபரணமாக இருக்கும் மூக்கையுடைய
புள்ளைச் செலுத்தி. அன்றிக்கே, ‘கறை அணி புள்’ என்பதற்குத் தாயான விந்தை, ‘புத்திரன் முகம்
காணவேண்டும்’ என்னும் ஆசையின் மிகுதியாலே முட்டையாய்
____________________________________________________
1. ‘வெறும்புறத்தில்
ஆலத்தி வழிக்க வேண்டும்படியாய்’ என்றது, ‘ஓர்
ஒப்பனையால் வந்த அழகுக்கு அன்றியே, இயற்கை
அழகிற்கு ஆலத்தி
வழிக்க வேண்டும்படியாய்’ என்றபடி. ஆலத்தி வழித்தல் - கண்ணெச்சில்
வாராதபடி
செய்யும் ஒரு சடங்கு விசேடம்.
2.
ஸ்ரீவிஷ்ணு. 6. 4 : 6.
3.
பெரியாழ்வார்
திருமொழி, 1. 6 : 11. இது, ‘கரைமரம் சேர்க்கைக்குக்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்தான்’ என்பதற்குப் பிரமாணம்.
|