முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
366

இருக்கிற பருவத்தில் ஒரு காரியத்தைச் செய்தாளாய், அத்தால் ஓர் அடையாளம் பிறந்து, அவ்வடையாளம், எம்பெருமானுக்கு இருக்கும் ஸ்ரீ வத்ஸத்தைப் போன்று ஆபரணமாய் இருத்தலின், அதனை ஆபரணமாக உடைய புள் என்னலுமாம். திருமேனியினுடைய பரிசத்தால் திமிர்ந்து செல்லாது நிற்றலின், தேர் முதலிய பொருள்களை நடத்துமாறு போன்று வடிம்பிட்டுத் தாக்கி நடத்த வேண்டி இருத்தலின், ‘கடாவி’ என்கிறார். 1‘தேவரீருடைய திருவடிகள் தாக்குவதால் தன்மேல் உண்டாகின்ற தழும்புகளின் அழகையுடைய பெரிய திருவடி’ என்னக் கடவதன்றோ?

    அசுரரைக் காய்ந்த - இப்படிப் பெரிய திருவடியை நடத்தா நின்றுகொண்டு அசுரக்கூட்டங்களை அழிப்பித்த. ‘அடியாருடைய இன்பத்துக்குக் காரணமாக இருக்கும் கருவியே அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதற்கும் கருவி’ என்கை. அம்மான் - இப்படிச் சிறியதைப் பெரியது நலியாதபடி நோக்கும் 2நிருபாதிக சேஷி. நிறைபுகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே - ‘இத்தகைய பாதுகாத்தலால் குறைவற்ற புகழைப் பிரீதியின் மிகுதியினாலே ஏத்தியும் பாடியும் பத்தி பாரவஸ்யத்தாலே இருந்த இடத்தில் இராமல் ஆடியும் வாழ்கின்ற நான், பகவானுடைய இன்பத்துக்கு ஒரு தடையை உடையேன் அல்லேன்,’ என்கிறார். முட்டு - விலக்கு.

(2)

324

        முட்டுஇல்பல் போகத்து ஒருதனி நாயகன்
            மூவுல குக்குஉரிய
        கட்டியைத் தேனை அமுதைநன் பாலைக்
            கனியைக் கரும்புதன்னை
        மட்டுஅவிழ் தண்அம் துழாய்முடி யானை
            வணங்கி அவன்திறத்துப்
        பட்டபின் னைஇறை யாகிலும் யான்என்
            மனத்துப் பரிவுஇலனே.

   
பொ-ரை : ‘தடை இல்லாத பல போகங்களையும் மூன்று உலகங்கட்குமுரிய ஒப்பற்ற முதன்மையையுமுடைய இறைவனை, வெல்

____________________________________________________

1. ஸ்தோத்திரரத்நம். முதற்பத்து, வியாக். பக் 150, 151 காண்க.

2. நிருபாதிக சேஷி - காரணம் பற்றி வந்த தலைவன் அல்லாதவன்:
  ‘இயல்பாகவே தலைவனாய் உள்ளவன்’ என்றபடி.