முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
367

லக

லக்கட்டியை, தேனை, அமுதை, நல்ல பாலினை, பழத்தினை, கரும்பினை, தேனோடு மலர்கின்ற குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனை வணங்கி, அவனிடத்தில் அடிமைப்பட்ட பின்னர் யான் என் மனத்தின்கண் சிறிதும் துன்பமுடையேன் அல்லேன்’ என்கிறார்.

    வி-கு :
மட்டு - தேன். இறை - சிறிது. ‘மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன்’ என மாறுக. ‘மூவுலகுக்கு உரிய கட்டியை’ எனக் கட்டிக்கு அடைமொழி ஆக்கலுமாம்.

    ஈடு :
 மூன்றாம் பாட்டு. 1‘சர்வேசுவரனுடைய இனிமையைச் சொல்லுவதால் உண்டாகும் பிரீதியின் நிர்ப்பந்தத்தாலே அவனுக்கு அடிமை செய்கையிலே இழிந்த எனக்குச் சிற்றின்ப விஷயங்களின் ஆசையால் வரும் மனத்தின் துக்கம் இல்லை,’ என்கிறார்.

    முட்டு இல் பல் போகத்து மூவுலகுக்கு உரிய ஒரு தனி நாயகன் - சில நாள் சென்றவாறே 2முட்டுப்படுதல் இன்றி, எல்லை இல்லாத இன்பங்களை உடையவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாத தனி நாயகன். என்றது, 3‘எந்த நாதனால் மூன்று உலகமும் நல்ல நாதனை உடையன ஆகுமோ, அந்த இராமபிரான் தகுந்த நாதன்,’ என்கிறபடியே, 4தன்னை நாயகன் என்றால், பின்னர் இரண்டாம் விரலுக்கு ஆள் இல்லாதபடி இருக்கை. பிரமன் சிவன் முதலானோர்கட்கும் முதன்மை சொல்லுவார்கள் ஆதலின், அவர்களை வேறுபடுத்துவதற்காக ‘ஒரு தனி நாயகன்’

____________________________________________________

1. ‘கட்டியைத் தேனை அமுதை நனபாலைக் கனியைக் கரும்புதன்னை
  ... ... என் மனத்துப் பரிவு இலனே’ என்பதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. முட்டுப்படுதல் - தட்டுப்படுதல்; ‘அநித்தியம்’ என்றபடி.

3. ஸ்ரீராமா. அயோத். 2. 13.

4. ‘வில்லாளரை எண்ணில் விரற்குமுன் நிற்கும் வீரன்’
 
  என்றார் கம்பநாட்டாழ்வார்.

(நாகபா. 5.)

  ‘அதிரதர் தம்மை எண்ணில் அணிவிரல் முடக்கல் ஒட்டா
   முதிர்சிலை முனிஉம்’

(வில்லிபா. நிரை. 92)

  என்றார் வில்லிபுத்தூராழ்வார்.