|
லக
என்கிறார். 1‘‘எல்லா
உலகங்களும் அடைக்கலமாக அடையத் தக்கவரும் மஹாத்துமாவுமான ஸ்ரீ ராமபிரான்’ என்று, என்னைப்
போன்று பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ?’ என்னும்படி அன்றோ இருப்பது?
அன்றிக்கே,
2‘மூவுலகுக்கு உரிய கட்டியைத் தேனை அமுதை நன்பாலைக் கனியைக் கரும்புதன்னை’ என்று
கூட்டலுமாம். இதனால், இனிமையும் எல்லார்க்கும் பொதுவாய் இருக்கையைத் தெரிவித்தபடி. 3‘அந்தப்
பரம்பொருள் சுவை உருவம்’ என்கிறபடியே, உள்ளோடு புறம்போடு வேற்றுமை அறச் சுவையின் கனமாய்
இருத்தலின்’ ‘கட்டியை’ என்கிறார். ‘தேனை’ என்கிறார், கட்டியின் வன்மை தவிர்ந்திருத்தலின்.
சாவாமல் காப்பதுமாய் வேறுபட்ட சிறப்பையுடைய இனிய பொருளுமாய் இருத்தலின், ‘அமுதை’
என்கிறார். ஞானிகள் அல்லாதார்க்கும் இனியனாய் இருத்தலின், ‘பாலை’ என்கிறார்.
கண்ட போதே நுகரலாம்படி பக்குவமான பலமாய் இருத்தலின், ‘கனியை’ என்கிறார். கைதொட்டுச்
சுவைப்பிக்க வேண்டும் குற்றம் இன்றி இருத்தலின், ‘கரும்புதன்னை’ என்கிறார். மேற்கூறியவை
எல்லாம் உவமையாகத் தக்கன அல்ல ஆதலின், அவ்வப்பொருள்களையே சொல்லுகிறார். ‘சர்வரஸ:’
என்பது மறை மொழி. ஆக, இவருடைய அறுசுவை இருக்கிறபடி.
____________________________________________________
1.
ஸ்ரீராமா. யுத்.
‘மூவுலகுக்கு உரிய’ என்கிற
இதனால், இவன் குற்றத்தைக் காட்டி
ஈசுவரன் தன் சுவாதந்திரியத்தாலே கைவிட நினைத்தால் வழக்குப்
பேசிப்
பற்றலாம் என்னும் ஆகாரம் தோற்றுகிறது என்னுமதனை உதாரண
முகத்தால் அருளிச்செய்கிறார்,
‘எல்லா உலகங்களும்’ என்று தொடங்கி.
இது, வானர முதலிகளைப் பார்த்து ஸ்ரீ விபீஷணாழ்வான் கூறியது,
‘என்னைப் போன்று பெருமாளுக்கு உங்களால் சொல்லலாவது உண்டோ?’
என்றது, ‘இராவணன் தம்பி, காலமல்லாத
காலத்தில் வந்தான்,’ என்று
எனக்குத் தோஷம் சொன்னாற்போலே, பெருமாளைச் ‘சர்வலோக சரண்யர்
அன்று’ என்னப் போமோ? என்னை இந்த உலகத்தில் சேராதவன்
என்னப் போமோ?’ என்றபடி.
2. மூவுலகுக்கு உரிய’
என்பதனை, மேலே ‘தனிநாயகன்’ என்பதனோடு
சேர்த்துப் பொருள் அருளிச்செய்தார். ‘கட்டியைத் தேனை’
என்பன
முதலானவற்றிற்கு அடை ஆக்கிப் பொருள் அருளிச்செய்கிறார்.
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
3.
தைத்திரீயம்.
|