முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
369

மட

    மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை - தேன் பெருக்கு எடுக்கின்ற திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை உடையவனை. இதனால் அடைப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைத் தெரிவித்தபடி. வணங்கி அவன் திறத்துப்பட்ட பின்றை - 1காலயவனவன் சராசந்தன் முதலியவர்களைப்போன்று படைவீட்டை அடைமதிட்படுத்தி வந்து கிட்டுதல் அன்றி, முறையிலே அவன் பக்கலில் சேர்ந்த பின்பு. இதனால் ‘வணங்கிக் கொண்டு அவன் திருவடிகளிலே கிட்டுதல் அடியவனுக்குச் சொரூபம்’ என்பதனைத் தெரிவித்தபடி. இறை ஆகிலும் - மிகச் சிறிதாயினும். யான் மற்றைப் பொருள்களிலே விருப்பம் இல்லாத யான். என் மனத்துப் பரிவு இலன் - 2‘இந்த ஆத்துமாவானது ஆனந்த உருவமான பரம்பொருளை அடைந்து ஆனந்தத்தை உடையதாகின்றது,’ என்கிறபடியே, ‘பரமபதத்திற்குச் சென்றால் பூர்ண அனுபவம் பண்ணலாவது, இங்கே இருந்து குறைய அனுபவியாநின்றேன்’ என்னுமதனாலே வரும் மனத்தின் துக்கம் உண்டோ எனக்கு?’ என்கிறார்.

(3)

325

        பரிவுஇன்றி வாணனைக் காத்தும்என்று அன்று
            படையொடும் வந்துஎதிர்ந்த
        திரிபுரம் செற்றவ னும்மக னும்பின்னும்
            அங்கியும் போர்தொலையப்
        பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை
            ஆயனைப் பொன்சக்கரத்து
        அரியினை அச்சுத னைப்பற்றி யான்இறை
            யேனும் இடர்இலனே.

____________________________________________________

1. காலயவனன் : இவன், யவன தேசத்து அரசன்; சராசந்தன்: இவன்,
  மகததேசத்து அரசன்; இவர்கள் யாதவர்மேற்படை எடுத்தற்காக வந்து,
  மதுரையை முற்றுகையிட்டனர்; இவர்களுடைய துன்பத்தினின்றும்
  யாதவர்களை நீக்குவித்தற்காகவே மேலைச்சமுத்திரத்தில் துவாரகை என்ற
  நகரை உண்டாக்கினான் கண்ணபிரான்.

  ‘மறியா எழுந்திரை மாநீர் மதுரையில் மன்னவரைக்
  குறியா தவன்படை வந்தஅந் நாள்செழுங் கோகனகப்
  பொறியா டரவணைத் தென்னரங் கா!ஒரு பூதரும்அங்கு
  அறியா வகைத்துவ ராபதிக் கேஎங்ஙன் ஆக்கினையே?’

  என்பது திருவரங்கத்து மாலை.

2. தைத்திரீயம்.