|
தந
தந்த; அதாவது, ‘இவை
விரும்பாமலிருக்கவும் தனது அருளாலே தந்த இத்தனை,’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது
என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ படைத்தல் இருப்பது?’ என்னில், 1படைப்பது
கர்மங்களை நோக்கியேயாயினும், யௌகபத்யம் அருளின் காரியம்; 2ஒவ்வொரு கால
விசேடங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை. 3‘வரதனே!
பிரளய காலத்தில் அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்துமாக்களை இந்திரியங்களோடும்
சரீரங்களோடும் சேர்ப்பதற்கு விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கற்பத்தின் வசப்பட்டு
மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன, ‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன
இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளையுடையதாம்படி செய்தாய்,’ என்றார் பட்டர்.
_____________________________________________________
1. பக்கம் 27 காண்க.
2. ‘ஒவ்வொரு கால
விசேடங்கள்’ என்றது, புத்திரன் பிறக்குங்காலம்,
பட்டாபிஷேகம் செய்யுங்காலம் முதலியவற்றைக்
குறித்தது.
‘படையொழிந் திடுக;
தம் பதிக ளேயினி
விடைபெறு குகமுடி வேந்தர்;
வேதியர்
நடையுறு நியமமும்
நவையின் றாகுக;
கடவுளர் விழவொடு
களிக்க எங்கணும்’
என்பர் கம்ப நாடர்.
(பாலகா. திருவவதா. 114)
இங்ஙனமே சிந்தாமணியில்
நாமகளிலம்பகத்தில் திருத்தக்கதேவர்
கூறுதலும் காண்க.
இது, ‘யௌகபத்யம்,
அருளின் காரியம்’ என்பதற்குத் திருஷ்டாந்தம்.
3. ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்,
2 : 41. இது, ‘நிர்ஹேதுக கிருபையாலே படைத்தான்’
என்பதற்கும், ‘யௌகபத்யம் அருளின் காரியம்’
என்பதற்கும் மேற்கோள்.
யௌகபத்யம் - ஒருசேரப் படைப்பது. ‘மூலப்பகுதியை’ என்று தொடங்கும்
இவ்விடத்தில் ‘தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது, மூலப்பகுதி
ஒன்றில் தோன்றியதன்மையின்
பகுதியேயாவதல்லது விகுதியாகாதெனவும்,
அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும்,
அதன்கண் தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும்’ என்னும் பகுதி
ஒப்பு நோக்குக. (குறள். பரி.)
|