முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
373

New Page 1

யும் - அவனுக்குமேல் நாற்பத்தொன்பது அக்கினிகளும். போர் தொலைய - போரிலே மாள. இதனால், ‘சிவபிரான் தன்னை அடைக்கலமாகப் பற்றினாரை ஆபத்து வந்தவாறே காட்டிக் கொடுத்து ஓடுவான்,’ என்பதனையும், ‘சர்வேசுவரன் தன்னைப் பற்றினாரை எல்லா அளவிலும் பாதுகாப்பான்,’ என்பதனையும் தெரிவித்தபடி.

    பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை - பகைவர்கள் மேலே பொருகிற சிறகுகளையுடைய பெரிய திருவடியைக் கருத்து அறிந்து நடத்த வல்ல ஆச்சரியத்தையுடையவனை. இங்கு ஆச்சரியமாவது, வாணனுடைய கரத்தைக் கழித்து, அவனை 1இறையிலி செய்து, நாட்டுக்குத் தானே நின்று இறையான ஆச்சரியம். - 2‘வாணன் ஆயிரம் கரம் கழித்த ஆதி மால்’ அன்றோ? ஆயனை - 3அவன் தோற்றதும் தன் தரம் குலையாதே நிற்கிற நிலையிலே; இவன் வென்றதும் தன்னைத் தாழவிட்ட இடத்திலே. பொன் சக்கரத்து அரியினை - அனுகூலர்க்கு விரும்பத்தக்க திருவாழியைத் தரித்துப் பகைவர்களுக்குச் சிரமப்பட்டும் காண முடியாதவனை. 4‘ஓ கிருஷ்ணனே! ஓ கிருஷ்ணனே! நீண்ட திருக்கைகளையுடையவனே! புருஷோத்தமனாயும் எல்லாரையும் நியமிக்கின்றவனாயும் பிறப்பு இறப்பு இல்லாதவனாயும் எல்லார்க்கும் மேலானவனாயும் இருக்கும் தன்மையை அறிவேன்,’ என்கிறபடியே, தோள்வலி கண்ட பின்பு ஆயிற்றுச் சர்வேசுவரன் என்று அறிந்தது. அச்சுதனை - அடியார்களை நழுவ விடாதவனை.

    சிவபிரான், தன்னை அடைந்த வாணனைக் கைகழிய விட்டு ஓடினான் அன்றோ? 5சடையான் ஓட அடல் வாணன் தடந்

____________________________________________________

1. ‘இறை இலி செய்து’ என்பதற்கு, ‘கப்பம் இல்லாதவன் ஆக்கி’ என்றும்,
  ‘அற்பத்தேவையாகிற கடவுளை இல்லாதவன் ஆக்கி’ என்றும், ‘கைகள்
  இல்லாதவனாக்கி’ என்றும் பொருள் கொள்க. நின்று இறையான -
  நிலைத்து இறைவனான.

2. திருச்சந்த விருத்தம், 53.

3. ‘ஆயன்’ என்று அருளிச்செய்ததற்கு பாவம், ‘அவன் தோற்றதும்’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

4. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 33 : 41. இது சிவபிரான் கூற்று.

5. பெரிய திருமொழி, 5, 1 : 7.