|
இடர
இடர் இன்றியே - ஒரு
வருத்தமும் இல்லாமல். ஒரு நாள் - ஒரே நாளில் செய்யும் தீக்ஷையையுடைய யாகத்திலே. ஒரு போழ்தில்
- காலையில் செய்ய வேண்டிய யாக காரியங்களைச் செய்து முடித்து நடுப்பகலில் செய்ய வேண்டிய
காரியங்களைச் செய்து முடிப்பதற்கு முன்னே. எல்லா உலகும் கழிய - ஆவரணங்கள் ஏழற்கும் அப்பாற்பட.
படர் புகழ் பார்த்தனும் - புகழையுடைய அருச்சுனனும். 1‘மூன்று உலகங்களுக்கும் நாதனும்
ஜனார்த்தனனுமான ஸ்ரீ கிருஷ்ணன் எவனுக்கு மந்திரியாயும் பாதுகாப்பவனாயும் சிநேகிதனாயும்
இருக்கிறானோ’ என்கிறபடியே, கிருஷ்ணனையே எல்லாவித உறவுமாகப் பற்றினவன் ஆதலின், ‘படர்
புகழ்ப் பார்த்தன்’ என்கிறார். வைதிகனும் - கிருஷ்ணன் திருவடிகளிலே எல்லை இல்லாத பத்தியையுடைய
பிராமணனும். உடன் ஏற - தன்னோடே கூட ஏற. திண் தேர் கடவி - இவர்களைத் தேரிலே ஏற்றிக்கொண்டு,
காரியத்தின் தன்மை குலையாமல், மூலகாரணமான பிரகிருதி முடிவாகத் தேருக்குத் திண்மையைக் கொடுத்து
நடத்தி. 2மண் பிண்டமாய் இருக்கும் நிலையிலும் குடம் தொடர்வதைப் போலே.
சுடர் ஒளியாய் நின்ற
- எல்லை இல்லாத ஒளி உருவமாய் ஒரே தன்மையாய் நின்ற. ஒளி - அழகு. தன்னுடைச்சோதியில் -
தனக்கே உரியதான சிறப்பையுடைய பரமபதம். அன்றிக்கே, ‘தன்னுடைய ஒளி வெள்ளம் இட்டாற்போன்று
இருக்கின்ற பரமபதம்’ என்னலுமாம். 3‘சூரியன் சந்திரன் அக்கினி இவர்களைக் காட்டிலும்
கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான நாராயணனுடைய வைகுண்டமானது தன்னுடைய ஒளியினாலே
தேவர்கள் முதலியோர்களாலும் காண்டற்கு அரியதாகி விளங்குகிறது,’ என்கிறபடியே, ஆயிரம் கோடி
அக்கினி ஆதித்தியர்களுடைய ஒளியை ஓடவைத்து ஒரு தேசமாக வகுத்தாற் போலே இருக்கையாலே இவர்களுக்குக்
கண்கொண்டு பார்க்க வொண்ணாது; ஆகையாலே, மூலப்பகுதியின் அளவிலே இவர்
____________________________________________________
1.
பாரதம், ராஜசூயம்.
2. மூலப்பிரகிருதிக்குச்
சென்றும் தேருக்குத் திண்மையைக் கொடுத்து
நடத்தியதற்கு அசம்பாவிதமான திருஷ்டாந்தம், ‘மண்
பிண்டமாயிருக்கும்
நிலையிலும்’ என்று தொடங்கும் வாக்கியம். இது, ‘அகடிதகடநாசாமர்த்தியம்’
என்றபடி.
3.
பாரதம், ஆரண்ய பர்வம்.
|