|
க
களை நிறுத்தி, தன் நிலமாகையாலே
தானே போய்ப் புக்கான். தண்ணீரிலே மீன் உலாவுமாறு போன்று தேசிகரே புகவேண்டும் நிலம் அன்றோ
அது?
வைதிகன்
பிள்ளைகளை - பிரமாணனுடைய புத்திரர்களை. 1உடலொடும் கொண்டு கொடுத்தவனை - காலத்தால்
உண்டாகின்ற மாறுபாடு ஒன்றும் இல்லாத தேசமாகையாலே, கொண்டுபோகிற போதைப் படியில் ஒன்றும்
குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன். அன்றிக்கே, ‘பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட
சவடிப் பூணுநூலும், இட்ட காது பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்’
என்னுதல். ‘பிறக்கப் பிறக்கக் கொண்டு போனார்களாகில், இப்போது இவை எல்லாம் உண்டோ?’
என்று பட்டரைக் கேட்க, ‘ரிஷி புத்திரர்கள் ஆகையாலே பிறக்கிற போதே அவற்றோடே
பிறப்பர்காணும்’ என்று அருளிச்செய்தார். பற்றி ஒன்றும் துயர் இலனே - 2கடலில்
நீரை மலையின்மேலே ஏற்றுமதுவே வருத்தமுள்ளது; மலையில் உள்ள நீரைக் கடலுக்குக் கொண்டு வருமன்று
ஒரு வருத்தம் இல்லையே? அப்படியே, அங்குப் புக்காரை இங்கே மீட்கையாகிறது அவன் திருவுள்ளத்தோடு
சேராதது; இங்குள்ளாரை அங்கே கொண்டுபோகையாயிற்று அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்துவது.
____________________________________________________
1. ‘உடலொடும்’ என்பதற்கு
இரண்டு வகையில் பொருள் அருளிச்செய்கிறார்:
‘இங்கு இருந்த இளமைப் பருவத்தோடே’ என்பது, முதல்
வகை.
இரண்டாவது, ‘இட்ட ஆபரணங்களோடே’ என்பது. உடல் - சரீரமாதல்;
ஆபரணமாதல். சவடிப்
பூணுநூல் - ‘பொன்னாற்செய்த பூணுநூல்’
என்னுதல்; ‘சவடியும் பூணுநூலும்’ என்னுதல். சவடி - அரைநாண்.
2. இவருக்குத் துயராவது,
அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்தாத செயலை
ஆசைப்படுதல். ‘அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்தாத
செயல் யாது?’
என்ற சங்கையிலே, அவன் திருவுள்ளத்திற்குப் பொருந்தாதது இன்னது,
பொருந்துமது இன்னது
என்னுமதனை எடுத்துக்காட்டு மூலமாக
அருளிச்செய்கிறார், ‘கடலில் நீரை’ என்று தொடங்கி நான்கு
வாக்கியங்களாலே.
3. இப்படித் திருவுள்ளத்திற்குப்
பொருந்தாததனை அவன் செய்தது
பிராமணனுடைய நிர்ப்பந்தத்திற்காக என்று அருளிச்செய்யாநின்று
கொண்டு, இத்தகைய துக்கம் தமக்கு இல்லை என்கிறார், ‘புத்திரன்
நிமித்தமாக’ என்று தொடங்கி.
|