முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
378

327

327

        துயர்இல் சுடர்ஒளி தன்னுடைச் சோதி
             நின்றவண் ணம்நிற்கவே
        துயரின் மலியும் மனிசர் பிறவியில்
             தோன்றிக்கண் காணவந்து
        துயரங்கள் செய்துதன் தெய்வநிலை உலகில்
             புகஉய்க்கும் அம்மான்
        துயரம்இல் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
             யான்ஓர்துன் பம்இலனே.


    பொ-ரை :
‘துன்பங்கட்கு எதிர்த்தட்டான மிக்க ஒளியுடன் கூடிய தன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகமானது பரமபதத்தில் நிற்கிறவாறே இவ்வுலகத்திலும் நிற்கும்படியாக, துன்பங்களால் மிக்கிருக்கின்ற மனிதப் பிறவியில் தோன்றி, ஊனக் கண்கள் காணுமாறு வந்து துன்பங்களைச் செய்து, தனது தெய்வத் தன்மையை உலகத்தில் புகும்படியாகச் செலுத்துகின்ற இறைவனும், குற்றம் இல்லாத புகழையுடைய கண்ணபிரானும், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும் ஆன எம்பெருமானது நற்குணங்களை அனுபவித்த யான் ஒரு துன்பமும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.

    வி-கு :
‘நிற்கத் தோன்றிக் காண வந்து துயரங்கள் செய்து புக உய்க்கும் அம்மான்’ எனக் கூட்டுக. துயரங்கள் செய்தலை வியாக்கியானத்திற்காண்க. துற்ற - நுகர்ந்த.

    ஈடு :
ஆறாம் பாட்டு. 1‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய விக்கிரகத்தை, இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கிச் சமுசாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்கின கிருஷ்ணனுடைய குணங்களை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு துக்கத்தின் வாசனையும் இல்லை,’ என்கிறார்.

    துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி - தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய், பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது. நின்ற வண்ணம் நிற்கவே - அங்கு இருக்கும்

____________________________________________________

1. ‘தன்னுடைச்சோதி நின்ற வண்ணம் நிற்கவே, கண் காண வந்து உயக்கும்
  அம்மான் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலன்’ என்றதனைக் கடாக்ஷித்து,
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.