முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
379

படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க. 1‘எனக்கு உரியதான பிரகிருதியை அதிஷ்டித்து என் மாயையால் உண்டாகிறேன்,’ என்று சொல்லப்பட்டதே அன்றோ? துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி - துக்கக் கடலிலே அழுந்தாநின்றுள்ள மனிதர்களுடைய பிறவிகளிலே தோன்றி. 2‘எல்லா உலகங்கள் ஆகிற தாமரை மலரும்படி தேவையாகிற கீழைச்சந்நிதியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’ என்கிறபடியே, தோன்றினவன் ஆதலின், ‘தோன்றி’ என்கிறார்.

    கண் காண வந்து - ஊனக்கண்களுக்குப் புலப்படுதல் இன்றி நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னை ஊனக்கண்களுக்குப் புலப்படச் செய்து. துயரங்கள் செய்து - அடியார்களை அழகாலே நோவுபடுத்தியும்; பகைவர்களை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்; 3‘நீண்ட கண்களையுடைய கிருஷ்ணர் பூமியினுடைய பாரத்தைப் போக்கி, எல்லா உலகத்தையும் மயங்கச் செய்து, தம்முடைய மேலான இருப்பிடத்தை அடைந்தார்,’ என்கிறபடியே, பகைவர்களை முட்கோலாலே சாடியும் அடியார்களை கண்ணழகாலே சாடியும் போனபடி. 4‘ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்! ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன்!’ என்னும்படி அன்றோ கண்ணற்று நலியும்படி?

    தன் தெய்வ நிலை - இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய தன்மையை. உலகில் - இதற்கு இட்டுப்பிறவாத சமுசாரத்திலே. புக உய்க்கும் - செலுத்துகின்ற. அம்மான் - அவர்கள் விரும்பாமலே, சமுசாரிகளுக்குத் தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் சம்பந்தத்தைச் சொல்லுகிறார். ‘ஆக, ‘பரமபதத்திலே நடையாடக் கூடிய இவ்வுலக சம்பந்தம் இல்லாத விக்கிரகத்தைச் சமுசாரிகளுக்குத் தெரிவித்து, அங்கு உள்ளாரோடு சம்பந்தம்

____________________________________________________

1. ஸ்ரீ கீதை, 4 : 6.

2. ஸ்ரீ விஷ்ணு பரா. 5. 3 : 2.

3. பாரதம்

4. திருவாய். 7. 7 : 1. கண்ணற்று - அருள் இன்றி. இது, அனுகூலரைக்
  கண்ணழகாலே நலிவதற்குப் பிரமாணம்.