|
இங
இங்கு உள்ளாரோடும் ஒத்திருக்கையாலே,
‘தன் தெய்வ நிலை புக உய்க்கும் அம்மான்’ என்கிறார்,’ என்றபடி. அன்றிக்கே,
1‘தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே
உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’ என்றுமாம்.
துயரம் இல் சீர்க்
கண்ணன் - குற்றங்கட்கு எதிர்த்தட்டான கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன். மாயன் - ஆச்சரியமான
குணங்களையும் செயல்களையும் உடையவன். புகழ் துற்ற யான் - அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற
யான். ஓர் துன்பம் இலன் - ‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு
இவ்வுடம்போடே அணையலாம்படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே
போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?
(6)
328
துன்பமும் இன்பமும்
ஆகிய செய்வினை
யாய்உல கங்களுமாய்
இன்பம்இல் வெந்நர
காகி இனியநல்
வான்சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களும்
ஆகிப் பலபல
மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளை
யாட்டுடை யானைப்பெற்று
ஏதும்அல் லல்இலனே.
பொ-ரை : ‘துன்பத்திற்கும்
இன்பத்திற்கும் காரணமாகிய நல்வினை தீவினைகளுமாகி, உலகங்களுமாகி, இன்பம் இல்லாத கொடிய
நரகமாகி, இனிய பொருள்கள் தங்கியிருக்கின்ற மிகச்சிறந்த சுவர்க்கலோகம் முதலிய உலகங்களுமாகி,
நிலை பெற்ற
____________________________________________________
1. ‘தெய்வ நிலை’
என்பதற்கு, இரண்டு வகையாகக் கருத்து அருளிச்
செய்கிறார்: பிரகிருதி சம்பந்தம் இல்லாத
விக்கிரஹம்’ என்பது, முதல்
கருத்து. இரண்டாவது கருத்து, ‘ஆஸ்ரித பாரதந்திரியம்’ என்பது.
இதனையே, ‘தூது சென்று’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘தன்
படியை’ என்றது. ‘அடியார்கட்குப்
பரதந்திரனாய் இருக்கும் தன்மையை’
என்றபடி. எழுதிக்கொண்டவன் - அடிமை கொண்டவன்.
|