|
ற
றாகில் 1இவை,
போக பூமிகள் ஆகின்றன; அன்றிக்கே, அங்கே, போக பூமியைச் சொல்லிற்றாகில், இங்கு, இன்ப
துன்பங்களை மாத்திரமே சொல்லுகின்றன.
மன் பல் உயிர்களும்
ஆகி - நல்வினை தீவினைகளைச் செய்கின்றவர்களும் அவற்றின் பலன்களை நுகர்கின்றவர்களுமாய்,
என்றும் உள்ளவர்களாய், பலராய் உள்ள ஆத்துமாக்களுக்கு நிர்வாஹகனாய். பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று - கணக்கு இல்லாததான பிரகிருதியின் விகாரமுகத்தால்
உண்டான மக்களுடைய மதிமயக்கங்களாலே பிரீதிக்கு இடமான விளையாட்டுகளை உடையவனைப் பெற்று.
‘எல்லார்க்கும் நலத்தையே செய்கின்றவனாய்ப் பேரருட் கடலான சர்வேசுவரனுக்கு, தன்னை நீங்கி
மக்கள் துதிக்கப்படுகிற இது பிரீதிக்குக் காரணம் ஆகிற படி யாங்ஙனம்?’ என்னில், இவற்றைத்
தன்னுடைய பேரருளால் காக்க நினைத்தால் அது இவற்றுக்கு விருப்பம் இல்லாததாய் இருக்கும் இருப்பு
இறைவனுக்கு நகைக்குக் காரணமாய், அவ்வழியாலே லீலா ரசத்துக்குக் காரணமாய்விட்டது; இதற்கு நேர்கொடு
நேரே கருத்து இது. கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க்
கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச்
சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது
கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.
ஏதும் அல்லல்
இலனே - ‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக்
கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ என்கிறார். என்றது, 2‘என்னைக் கர்மங்கள்
ஒட்டுவது இல்லை; கர்மபலத்தில் எனக்கு ஆசை இல்லை; இவ்விதமாய் என்னை எவன் அறிகின்றானோ,
அவன், கர்மங்களினால் கட்டுப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, அவனை
____________________________________________________
1. ‘இவை’ என்றது,
‘நரகு, சுவர்க்கம்’ என்ற சொற்களை. ஆக, ‘நரகு’ என்ற
சொல்லிற்கு, ‘நரகலோகம்’ என்றும்,
‘துன்பம்’ என்றும் இரு வகையான
பொருளும், ‘சுவர்க்கம்’ என்பதற்கு, ‘சுவர்க்கலோகம்’ என்றும்
‘இன்பம்’
என்றும் இரு வகையான பொருளும் கூறியபடி.
2. ஸ்ரீ கீதை, 4 : 14.
|