முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
383

அற

அறிந்தவன் கர்மங்கட்குக் கட்டுப்படமாட்டான் ஆகையாலே, எனக்கும் கர்மங்கட்குக் கட்டுப்படுதல் இல்லை,’ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, ‘உலகத்தின் படைப்பு முதலானவைகளை அவனுடைய விளையாட்டாக நினைக்கின்ற எனக்கு இந்த லீலா விபூதியில் சேர்தலாகிற துக்கம் இல்லை,’ என்கிறார் என்னலுமாம். என்றது, 1‘‘நான் கட்டிய கட்டினை எவன் ஒருவன் என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ளப் பார்க்கிறான்? அவன் இதனைக் கடப்பான்,’ என்று அவன் சொல்லி வைத்தபடியே, அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ என்கிறார் என்றபடி.

(7)

329

அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும்
    அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
    ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு
    எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
    யான்ஓர்துக் கம்இலனே.

    பொ-ரை : ‘துன்பம் இல்லாத இன்பத்திற்கு அளவு இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்திய அழகும் எல்லா இடங்களிலும் சூழ்ந்த ஒளியும் உடையவனும், அக இதழ்களையுடைய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் சேர்க்கையால் உண்டான ஆனந்தங்களையுடையனாய் நிற்கின்ற தலைவனும், முடிவு இல்லாத ஞானத்தை உடையவனும், அந்த ஞானத்தினால் படைத்தல் முதலான எல்லாக் காரியங்களையும் செய்கின்ற, எல்லை இல்லாத ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும், கண்ணபிரானாய் வந்து அவதரித்தவனும் ஆன எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றி, யான் ஒரு துக்கமும் இலேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘இறந்து அமர் ஒளியன்’ எனக் கூட்டுக. ‘செய் மாய்’ என்க.

___________________________________________________

1. ஸ்ரீ கீதை, 7 : 14.