|
ய
யாம் - பல பொருள்கள்
ஆகக்கடவேன்’ என்பது? மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும்
வலிமைக் குறைவினையும் உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம்
அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்குமாதலின், ‘ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்’
என்கிறார்.
எல்லை இல் மாயனை
- நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல ஆச்சரியமான சத்திகளோடு
கூடியவனை. ‘இப்படிப்பட்டவன் யார்?’ என்னில், கண்ணனை - கிருஷ்ணனை. ‘ஆயின், கிருஷ்ணனுக்குப்
படைத்தல் முதலான தொழில்கள் உண்டோ?’ எனின், 1‘உலகங்களினுடைய உற்பத்தியும்
கிருஷ்ணனேயாவன்; உலகங்கள் பிரளயத்தால் அழிவதும் கிருஷ்ணனேயாவன்,’ என்பது பாரதம்.
கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக
வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், 2‘இந்தப் பரமாத்துமா
தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம்
இல்லை,’ என்கிறார்.
(8)
330
துக்கம்இல் ஞானச்
சுடர்ஒளி மூர்த்தி
துழாய்அலங்
கல்பெருமான்
மிக்கபன் மாயங்க
ளால்விகிர் தம்செய்து
வேண்டும்
உருவுகொண்டு
நக்கபி ரானோடு
அயன்முத லாகஎல்
லாரும் எவையும்தன்னுள்
ஒக்க ஒடுங்க
விழுங்கவல் லானைப்பெற்று
ஒன்றும் தளர்வுஇலனே.
பொ-ரை :
துக்கம்
இல்லாத ஞானமும் மிக்க ஒளியோடு கூடிய திருமேனியும் திருத்துழாய் மாலையுமுடைய பெருமான், அளவு இல்லாத
பல வகைப்பட்ட ஆச்சரியமான சத்திகளோடு
____________________________________________________
1. பாரதம்.
2. ஆனந்தவல்லி,
7.
|