முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
39

யன

    யன்று’ என்கிறபடியே, ‘ இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். யான் - நீ தந்த கரணங்களை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினைச் சூழ்த்துக் கொண்ட யான். உன்னை - ‘நான் விளைத்துக்கொண்ட கேட்டிற்குப் போக்கடி சொல்லாய்’ என்று வளைக்கலாம்படியாயிருக்கிற உன்னை. இனி - நீ தந்த கைம்முதலை அழித்துக்கொண்ட பின்பு. இனி வந்து கூடுவனே - ‘இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.

    எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்; ஒன்பதாம் பாட்டில் - நிராசராக, பத்தாம் பாட்டில் - அவன் வந்து சமாதானம் செய்தானாக அமையும்’ என்று அருளிச்செய்வர். 1ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம் என்பது.                                     

(1)

235

வன்மா வையம் அளந்தஎம் வாமனா!நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதல்அரிந்து,
நின்மா தாள்சேர்ந்து நிற்பதுஎஞ் ஞான்றுகொலோ?

_______________________________________________

1. இப்பாசுரத்தின் நான்காமடிக்கு எம்பெருமானார் நிர்வாஹமும், முன்புள்ள
  முதலிகள் நிர்வாஹமும் என இரண்டு நிர்வாஹங்கள் அருளிச்செய்கிறார்.
  ‘அவற்றுள் எம்பெருமானார் நிர்வாஹம், ‘என் கணவன்’ என்றது முதல்
  ‘ஒருநாளிட்டுத்தர அமையும்’ என்றது முடியவுள்ள பகுதி. வியாக்கியானத்தின்
  ஈற்றிலுள்ள ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த
  நாளைச் சொல்லாய்’ என்ற பகுதியும் இதன் விவரணமேயாகும். ‘இனி வந்து
  கிட்டுகை என்று ஒரு பொருளுண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார்
  என்றது, முன்புள்ள முதலிகள் நிர்வாஹம். ‘உன் திருவடிகளை நான் என்று
  கிட்டுவன்? அந்த நாளைச் சொல்ல வேண்டும்,’ என்பது எம்பெருமானார்
  நிர்வாகத்தின் கருத்து. இனி, கிட்டுவதற்கு வழியில்லை என்பது முன்புள்ள
  முதலிகள் நிர்வாகத்திற்குக் கருத்து.