முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
390

இரண

இரண்டாவதாக வேறு ஒரு காரணம் இல்லாததாய் உள்ள நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய். அன்றிக்கே, ‘ஒரு பொருளிலும் குறைவு வாராதபடி எங்கும் ஒக்க ஒரே உருவமாய் எல்லாக் காலத்திலும் பரந்து நிறைந்து, இவற்றைப் படைக்குமிடத்தில் மூன்று விதக்காரணமும் தானேயாய், வேறுபட்ட சிறப்பையுடைய ஞான உருவனாய்’ என்னுதல். அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் - உழக்காலே கடலை முகக்க ஒண்னாதது போன்று, அளவிற்கு உட்பட்ட பொருள்களை அறியும் இந்திரியங்களாலே அளவிற்கு உட்படாத பரம்பொருளை அறிய முடியாது அன்றோ? ஆதலால், ‘ஐம்புலன்கள் அறியா வகையால்’ என்கிறார். அருவாகி நிற்கும் - அவற்றால் அறிய ஒண்ணாதபடி உருவம் இல்லாதபடி நிற்பான்.

    வளர் ஒளி ஈசனை - ‘இப்படி அறிவுடைப்பொருள் அறிவில் பொருள்களோடே கூடி அவற்றுக்கு உள் உயிராய்ப் புக்கு நின்றால், அவற்றிற்கு உண்டாகும் குற்றங்கள் அவனைத் தீண்டாவோ?’ என்னில், 1‘ஆத்துமா கர்மபலத்தை நன்றாக நுகர்கின்றது; இறைவன் கர்மபலத்தை நுகராமல் வேறாக மிகுதியாகப் பிரகாசிக்கின்றான்,’ என்கிறபடியே, அவற்றிற்கு உண்டான குற்றங்களால் தீண்டப்படாதவனாய், எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றமையால் வந்த புகரையுடையனாய் இருப்பான். மூர்த்தியை - இப்படி உலகமே உருவாய் இருக்கவும் இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய விக்கிரகத்தோடு கூடினவனாய் நித்தியவிபூதியில் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. பூதங்கள் ஐந்தை இரு சுடரை - காரணமான மண் முதலான ஐம்பெரும்பூதங்களையும், காரியக் கூட்டத்தில் தலையான சந்திர சூரியர்களையுமுடையவனாய் லீலா விபூதிக்கு நிர்வாஹகனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. இதனால், அவனுக்கே உரியதான விக்கிரகத்தைப் போன்று

___________________________________________________

1. இருக்கு வேதம்.