முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
41

New Page 1

தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின், ‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல். எம் வாமனா - பிறரால் கவர்ந்துகொள்ளப்பட்ட ராஜ்யத்தையுடையவனான இந்திரனுக்காக அன்று, 1வாமனாவதாரமும் தம்பொருட்டு என்றிருக்கிறார். நின் - 2‘எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் - பல விதமான பெரிய மூலப்பகுதி. 3தேவர்கள் முதலான பல்வகைப் பொருள்களாகிய காரியத்தின் பன்மையைக் காரணத்தின்மேலிட்டு உபசார வழக்கால் ‘பன்மாயம்’ என்கிறார். இனி, ‘மூலப்பகுதி முக்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கையாலே குணபேதங்களை இட்டுப் ‘பன்மாயம்’ என்கிறார்,’ எனலுமாம்.

    சுக்கிரன் தடுத்தமையையும், மஹாபலி அவன் வார்த்தைகளைக் கேளாமையையும் கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலத்தில் 25 முதல் 34 முடிய உள்ள செய்யுள்களிற் காண்க. அவற்றுள், இரு செய்யுள்களைக் கீழே தருகிறேன்.

‘கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்;
அண்டமு முற்றும் அகண்டமும் மேனாள்
உண்டவ னாம்இது உணர்ந்துகொள் என்றான்.’

‘வெள்ளியை யாதல் விளம்பினை; மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என் சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’

____________________________________________________

1. ‘எம்’ என்பதிலே நோக்காக, ‘வாமனாவதாரமும் தம்பொருட்டு
  என்றிருக்கிறார்’ என்று அருளிச்செய்கிறார்.

2. ஸ்ரீ கீதை, 7 : 14. ‘பன்மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்’
  என்னுமளவும் திருவுள்ளம் பற்றி, ‘என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது’
  என்னும் பொருளை அருளிச்செய்கிறார்.

3. மாயம் - மூலப்பகுதி. மூலப்பகுதியைப் ‘பல்’ என்ற அடைமொழியால்
  விசேடித்ததற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். ‘தேவர்கள் முதலான’
  என்று தொடங்கி. மூலப்பகுதி - காரணம்; தேவர்கள் முதலான பல வகைப்
  பொருள்கள் - காரியம். ‘’பிறப்பென்னும் பேதைமை’ என்ற திருக்குறளின்
  விசேடவுரையில், ‘பிறப்பென்னும் பேதைமை’ எனவும், ‘சிறப்பென்னும்
  செம்பொருள்’ எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார்’ எனப்
  பரிமேலழகர் உரைத்திருத்தலை ஈண்டுக் கருதல் தகும்.