|
236
236
கொல்லா மாக்கோல்
கொலைசெய்து
பாரதப்போர்
எல்லாச் சேனையும்
இருநிலத்து
அவித்தஎந்தாய்!
பொல்லா ஆக்கையின்
புணர்வினை அறுக்கல்அறா;
சொல்லாய், யான்உன்னைச்
சார்வதுஓர்
சூழ்ச்சியே.
பொ-ரை :
கொல்லுதற்குரிய கருவி அல்லாத, குதிரையை யோட்டுவதான சம்மட்டியைக்கொண்டு கொன்று, பாரதப்போரில்
இரு திறத்திலுமுள்ள படைகளையெல்லாம் குரு க்ஷேத்திரத்திலே அழித்த என் தந்தையே! கேட்டினை
விளைக்கின்ற சரீரத்தினுடைய சம்பந்தத்தை அறுப்பதற்கு இயலவில்லை; நான் உன்னையடைவதற்குரிய
உபாயத்தைச் சொல்ல வேண்டும்.
வி-கு :
‘கொல்லா’ என்பது கோலுக்கு அடை. ‘கொலை செய்து அவித்த எந்தாய்’ என்க. கொலைசெய்து -
ஒரு சொல். புணர்வினை - ஒரு சொல்; புணர்வு தொழிற்பெயர்; இன் - சாரியை. ஐ - இரண்டனுருபு.
இனி, இதனை இருமொழியாகக்கொண்டு; ‘ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற வினைகள்’ என்று
பொருள் கூறலுமாம். ‘சார்வதோர் சூழ்ச்சி சொல்லாய்’ என மாறுக.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1‘வாமனாவதாரம் முற்காலத்திலேயாகையாலும் நீர் பிற்பாடராகையாலும் இழந்து
அங்குக் கிட்டப்பெற்றிலீராகில், 2ஒருத்தியுடைய மங்கலநாணிற்காகப் பாண்டவர்களுக்குச்
சொல்லிற்றுச் செய்து திரிந்தோமே! அங்கே வந்து கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அங்குந்தப்பினேன்,’
என்கிறார்.
கொல்லா
மாக்கோல் கொலை செய்து - 3துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த
காலத்தில்
____________________________________________________
1. பாசுரத்தின் முன் இரண்டு
அடிகளைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ஸ்ரீவசனபூஷணம் காண்க.
3. ‘திவ்ய ஆயுதங்கள்
இருக்க, மாக்கோலாலே கொலை செய்வான் என்?’
என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி, அதற்கு விடையருளிச்செய்கிறார்,
‘துரியோதனனும்’ என்றது முதல், ‘கோலைக்கொண்டு முடித்துப்
போகட்டான்’ என்றது முடிய.
|