|
ப
படைத்துணை வேண்டி வந்து,
துரியோதனன் திருமுடிப் பக்கத்தேயிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலேயிருந்தான்;
பள்ளியுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’
என்ன, 1‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’
என்று, அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன,
‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன, ‘ஆகில், 2நாராயண கோபாலர்களை ஒருவர்
கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, 3அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப்
போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக, வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்!
இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன, அவனும் வந்து, ‘நீ
ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன, ‘அப்படியேயாகிறது’ என்று சொல்லிவிட்டு, கொலைக்குக் கருவியல்லாத
குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் போகட்டான். பாரதப் போர் - பாரதச் சண்டையிலே.
எல்லாச் சேனையும் - துர்வர்க்கம் அடையத் திரண்டதன்றோ இரண்டு படைகளிலும்? 4இங்கே
நாலைந்து பேரும், அங்கே ஒன்றிரண்டு பேரும் ஒழிய, முடித்துப் போகட்டான். இரு நிலம் - அவர்கள்
பக்கல் நன்மையில்லையேயாகிலும், அங்கே பட்டார்க்கு வீரசுவர்க்கங்கிட்டும் பூமியிலே. அவித்த
- வீடுமன் முதலியோர் காட்டுத்தீக் கிளர்ந்தாற்போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று
அவித்தான். 5‘மழை
____________________________________________________
1. பாரதம், உத்தியோகபர்.
6.
2. நாராயணகோபாலர்கள்
- கிருஷ்ணனுக்குக் கோபஸ்திரீகள் வயிற்றில் பிறந்த
பிள்ளைகள்.
3. ‘அசேதனக்
கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப்போன்று’ என்றது,
‘கர்மங்களே பேற்றினைக் கொடுப்பனவாகும்
என்று நினைத்துக்
கருமங்களைச் செய்கின்றவர்களைப் போன்று’ என்றபடி. கிரியா கலாபம் -
கர்மங்களின்
தொகுதி. அசேதனம் - அறிவற்றது.
இச்சரித விரிவை
வில்லி பாரதம், உத்தியோகபர்வம், வாசுதேவனைப்
படைத்துணையழைத்த சருக்கத்தால் உணரலாகும்.
4. ‘நாலைந்து பேர்’
என்றது, பாண்டவர்களை. ‘ஒன்றிரண்டு பேர்’ என்றது,
அசுவத்தாமன், கிருபன், கிருதவர்மன் என்னும்
இவர்களை,
5. பெரியாழ்வார்
திருமொழி, 3. 4 : 1.
|