|
ஓர
ஓர் இடத்திலேயோ?’
என்னில், எங்கணும் நிறைந்த - 1இடந்திகழ் பொருள்தொறும் கரந்து’ என்கிறபடியே,
எல்லா இடத்திலும் உண்டான எல்லாப் பொருள்களிலும், சாதி வடிவுதோறும் நிறைந்து தங்கியிருத்தல்
போன்று பூர்ணமாகப் பரவி நிறைந்திருக்கும். கண் - இடம். எந்தாய் - ஒருவனைப் பிடிக்க நினைத்து
ஊரை வளைவாரைப் போன்று எங்கும் பரந்திருத்தலும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘எந்தாய்’
என்கிறார். ‘ஆக, உன் பக்கல் அகப்படுத்திக்கொள்ள விரகு தேடி உணர்ந்து என்னைச் சூழ்ந்துகொண்டு
நீ நிற்கச்செய்தேயும், விஷயப் பிரவணனாய்த் தப்பினேன்,’ என்கிறார்.
மற்று எங்கும் தாழ்ச்சி
தவிர்ந்து - உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து. 2‘யாதானும்
பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி. நின் தாள்
இணைக்கீழ் வாழ்ச்சி - வகுத்ததுமாய் நிரதிசய போக்கியமுமாயிருக்கிற உன் திருவடிகளிலுண்டான கைங்கரியத்தை.
யான் சேரும் வகை அருளாய் - இதற்கு முன் 3புதியது உண்டு அறியாதன யான் கிட்டுவதொரு
வகையை அருளிச்செய்ய வேண்டும். இனி, ‘இவ்வாழ்ச்சிக்கு இட்டுப் பிறந்து வைத்து அதனை இழந்திருக்கிற
நான் கிட்டுவதொரு வகையை அருளிச்செய்ய வேண்டும்.’ என்னுதல். ‘இரண்டு இடங்களிலும் ஈடுபாடு ஒத்திருந்தும்,
‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், 5‘பிறரிடம் சேவிப்பது
நாய்த்தொழில்’ என்றும் அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும், 6‘நிழலானது
பொருள்களைத்
____________________________________________________
1. திருவாய்மொழி,
1. 1 : 10.
2. திருவிருத்தம்,
95.
3. புதியது உண்டறியாத
- ஏகதேச அனுபவமும் அறியாத.
4. ‘இரண்டு இடங்களிலும்
ஈடுபாடு ஒத்திருந்தும்’ என்றது,
‘இத்திருவாய்மொழியில் ஓடுகிற விஷயப் பிராவண்ய அநுசந்தானமும்,
பகவத்
பிராவண்யமும் ஒத்திருந்தும்’ என்றபடி. பிராவண்யம் - ஈடுபாடு
5. மநு ஸ்மிருதி, 4 : 6.
6. மூலசம்ஹிதை.
|