|
தெ
தொடர்வது போல’ என்ற
இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச்செய்கிறார். வந்தே - அது தானும்
முகந்தோற்றாதபடி நின்று அருளவொண்ணாது; என் கண்களுக்கு இலக்காம்படி இராமன் கிருஷ்ணன் முதலிய
அவதாரங்களைப் போன்று, எனக்காக ஓர் அவதாரத்தைச் செய்தேயாகிலும் வந்தருள வேண்டும்.
(4)
238
வந்தாய் போலே
வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்;
இதுவே இதுவாகில்,
கொந்தார்கா
யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்! யான்உனை
எங்குவந்து அணுகிற்பனே?
பொ-ரை :
‘பிரஹலாதன்,
கஜேந்திரன் இவர்களுக்கு உதவி செய்வதற்கு
வந்தது போன்று வந்தாகிலும் எனது மனத்தினை நீ சிதறுண்டு
போகாதபடி செய்கிறாயில்லை; இங்ஙனம் அருள் செய்யாமையாகிய இதுவே உன்னுடைய தன்மையாகில், பூங்கொத்துகள்
நிறைந்த காயாவினுடைய சிறந்த மலர் போன்ற அழகிய நிறத்தையுடைய என் தந்தையே! யான் உன்னை
எங்ஙனம் வந்து சேர்வேன்?’ என்கிறார்.
வி-கு :
‘வந்தும் செய்யாய்’ என்க. ‘செய்யாய்’ என்பது எதிர்மறை வினைமுற்று.
ஈடு : ஐந்தாம்
பாட்டு. 1‘நீர் ‘வந்தே அருளவேண்டும்’ என்கிறீர்; இது நமக்குத் தட்டுப்படும்; ஒரு
முறை பதினாயிரம் ஆண்டு இருந்தோம்; ஒரு முறை நூறு ஆண்டு இருந்தோம்; வருகை நமக்குப் பணியுண்டுகாணும்’
என்ன, ‘எனக்கும் அவ்வவதாரங்கள்போன்று சிலநாள் இருந்து உதவப்பெறில் அழகியது; அது செய்யத்
திருவுள்ளமின்றாகில், யானைக்குத் தோன்றியது போலேயும், பிரஹலாதனுக்குத் தோன்றியது போலேயும்
எனக்கும் ஒரு தோற்றரவு தோன்றியேயாகிலும் உதவவேண்டும்,’ என்கிறார்.
வந்தாய் போலே
வந்து - வந்து சில நாள் இருந்த இராம கிருஷ்ண அவதாரங்களைப் போன்று அன்றிக்கே,
___________________________________________________
1. ‘வந்தாய்
போலே வந்தும்’ என்றதிலே நோக்காக அவதாரிகை
அருளிச்செய்கிறார். தட்டுப்படும் - பிரயாசைப்படும்.
பதினாயிரமாண்டு -
ஸ்ரீராமாவதாரம். நூறாண்டு - கிருஷ்ணாவதாரம். பணியுண்டு - காரியமுண்டு.
|