|
க
கிறார். 1இது
பிராப்பியத்தினுடைய முடிவு நிலமாதலின், அவ்வருகு போக்கில்லையே? ஆதலின், திருவடிகளின் பேரொளியானது
மேல் ஏறக் கொழித்தது. 2கடலுக்குள் பட்டதொரு துரும்பு ஒரு திரை ஒரு திரையிலே தள்ளக்கிடந்து
அலையுமாறு போன்று, ஓரழகு ஓரழகிலே தள்ளக் கிடந்து அனுபவிக்கிறார் இதில். 3‘படிச்சோதி
பல்கலனாய்க் கலந்ததுவோ - திருமேனியின் அழகு பல ஆபரணங்களாகிக் கலந்ததுவோ! பல ஆபரணங்களின்
அழகு திருமேனியின் அழகாய்க் கலந்ததுவோ! படி - திருமேனி. சோதியாடை, நின் பைம்பொன் கடிச்சோதியாய்க்
கலந்ததுவோ! கடிச்சோதி, சோதி ஆடையாய்க் கலந்ததுவோ! இனி, ‘நின் பைம்பொன் கடிச்சோதி,
படிச்சோதி ஆடையொடும் பல் கலனாய்க் கலந்ததுவோ!’ என்று ஒரே தொடராகக் கொண்டு, ‘உன்னுடைய
அழகியதாய் விரும்பத் தக்கதான திவ்வியத் திருவரையிலுண்டான பேரொளியானது, சுவாபாவிகமான பேரொளியை
யுடைத்தான திருப்பீதாம்பரம் தொடக்கமான பல திருவாபரணங்களாய்க் கொண்டு சேர்ந்ததுவோ!’ என்று
பொருள் கூறலுமாம். படி - இயற்கை. இனி, ‘படிச்சோதி கலந்ததுவோ!’ என்பதற்குப்
___________________________________________________
1. ‘ஆனால், திருவடிகளுக்குக்
கீழே போகாமல் மேலே போவான் என்?’
என்னும் வினாவிற்கு விடையாக, ‘இது பிராப்பியத்தினுடைய
முடிவு
நிலமாதலின்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. ‘ஒவ்வோர் அவயத்தின் அனுபவமே போதியதாக நிறைந்திருக்க, வேறு
அவயவங்களிற் செல்லுதல் எப்படி?’ என்னும்
வினாவிற்கு விடையாகக்
‘கடலுக்குள் பட்டதொரு துரும்பு’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
‘தோள்கண்டார்
தோளே கண்டார் ; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே
கண்டார் ; தடக்கைகண் டாரும் அஃதே ;
வாள்கொண்ட கண்ணார்
யாரே வடிவினை முடியக் கண்டார் ?
ஊழ்கொண்ட சமயத்
தன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.’
என்றார் கம்பநாட்டடிகள்.
(பால. உலாவியற். 19.)
ஆக. ஓர் அழகு ஓர் அழகிலே
தள்ளப்போகிறாரித்தனை ஒழிய, அருசி
பிறந்தாதல், முற்றும் அனுபவித்தாதல் போகிறார் அல்லர்
என்றபடி.
3. பின் இரண்டு
அடிகளை மூன்று வகையாகக் கொண்டு கூட்டிப் பொருள்
கொள்க. முதல் வகை, ‘படிச்சோதி பல்கலனாய்க்
கலந்ததுவோ !’ என்பது.
இரண்டாவது வகை, ‘சோதியாடை கடிச்சோதியாய்க் கலந்ததுவோ !’ என்பது.
‘நின் பைம்பொன் கடிச்சோதி படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய்க்
கலந்ததுவோ !’ என்பது மூன்றாம்
வகை. ஓகாரம் ஜயப்பொருளதாதலின்,
ஒவ்வொரு வகையிலும் அதற்கு மறுதலைப்பொருளும் வியாக்கியானத்தில்
எழுதப்பட்டுள்ளது.
|