|
239
239
கிற்பன், கில்லேன்
என்றிலன்
முனம்நாளால்;
அற்ப சாரங்கள்
அவைசுவைத்து
அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம்
உயிர்செய்த
பரமா! நின்
நற்பொன் சோதித்தாள்
நணுகுவது
எஞ்ஞான்றே?
பொ-ரை :
முற்காலமெல்லாம்
நன்மை செய்ய அடுக்கும் என்றால் வல்லேன் என்றிசைந்திலேன்; தீமை செய்யலாகாதெனின் மாட்டேன்
என்று தவிர்ந்திலேன்; மிகச்சிறிய சாரங்களையுடைய பொருள்களைப் புசித்து உன்னை நீங்கினேன்;
பல வகையான எல்லையில்லாத உயிர்களைப் படைத்த மேலானவனே! நினது சிறந்த பொன் மயமான ஒளியையுடைய
திருவடிகளைச் சேர்வது எப்பொழுது?
வி-கு :
கிற்றல் - செய்யுந்திறம்கொள்ளுகை. கில்லேன் - எதிர்மறை. ஆயிரம் என்பது எல்லையின்மையைக்
குறிக்க வந்தது; நணுகுவது - தொழிற்பெயர்.
ஈடு : ஆறாம்
பாட்டு. 1‘என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை; உன்னைப் பார்த்தால்
தப்புவதற்கு விரகு இல்லை; ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’
என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து
போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார் என்றபடி.
கிற்பன் என்றிலன்
கில்லேன் என்றிலன் - ‘ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட வேறோர் முயற்சி
வேண்டுவதின்று, பேற்றில் வந்தால் மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷமாயிருக்கும்; அதற்கு
ஈடாக
____________________________________________________
1. தம்முடைய பூர்வாவஸ்தையையும்,
அவனுடைய சிருஷ்டியையும்
சொல்லுகிறதற்குப் பிரயோஜனம் அருளிச்செய்யாநின்று கொண்டு ‘நின்
நற்பொன்
சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே?’ என்று அடியைக்
கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|