முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
51

1ஒன

1ஒன்றைச்செய்ய வல்லீரே!’ என்றால், 2‘ஓம்; அப்படிச் செய்கிறேன்,’ என்றேன் இலன். ‘இதர விஷயப் பிராவண்யமானது, முயற்சி கனத்துப் பேற்றில் ஒன்றின்றிக்கே இருப்பதொன்று; அதனைத் தவிர வல்லீரே!’ என்றால், ‘ஓம்; தவிருகிறேன்’ என்றேன் இலன். ‘இப்படி விதித்ததைச் செய்யாமையும், விலக்கியதைச் செய்கையும் என்று தொடங்கி?’ என்ன, முன நாளால் - காலமெல்லாம் எனக்கு இதுவே தொழில். ‘இப்படி நெடுநாட்பட நம்மையொழியப் புறம்பே துவக்க வல்லபடி அனுபவிக்கத் தக்க இனியவையான பொருள்களும் உளவோ?’ என்னில், உன்பக்கல் வாராதபடி தகையத்தக்கன உண்டு; ஆனால், அவற்றின் பக்கல் ஒன்று இல்லை’ என்கிறார் மேல்:

    அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் - முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், 3தன் நாவில் பசை கொடுத்துப் புசிக்க வேண்டும்படி இருக்கிற பொருள்கள்தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை 4‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன். ‘நெடுநாள் இப்படி நம்மைக் கைகழிந்தீராகில் நம்மை இனிச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன, பல் பல் ஆயிரம் உயிர் செய்த பரமா - எண்ணிறந்த பொருள்களையுண்டாக்கின சர்வாதிகனே! என்றது, ‘இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள பொருளுக்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?’ என்கிறார் என்றபடி. உயிர் செய்கையாவது - நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி சரீரத்தோடே சேர்ப்பித்தல். நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று - உன்னு

____________________________________________________

1. ‘ஒன்றை’ என்றது, இச்சையையாதல், துவேஷமின்மையையாதல்.

2. ‘ஓம்’ என்பது, உடன்பாட்டை உணர்த்துவதோர் இடைச்சொல்.
  ‘என்றென் றிறைஞ்சி யிருதா மரைத்தாளில்
  ஒன்றுங் கதிர்முடியார்க்கு ‘ஓம்’என் றுரைத்தருளி,
  ‘இன்றிங் கிருவேமும் இப்போ துரைத்தமொழி
  ஒன்றும் பிறரறிய ஓதாது ஒழிகென்றான்.’

(வி. பா. கிருஷ்.)

  என்றவிடத்து ‘ஓம்’ என்பது இப்பொருளில் வந்திருத்தல் காண்க.

3. ‘தன் நாவில் பசை கொடுத்து’ என்றது, ‘உண்ணுகிற தன் நாக்கின் ஈரத்தாலே
  ரசத்தை உண்டாக்கி’ என்றபடி.
 

4. பெரிய திருமொழி, 1. 1 : 1.