|
New Page 1
டைய நன்றாய் விரும்பத்தக்கதாய்
நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக்கடவேன்?
(6)
240
எஞ்ஞான்றும் நாம்இருந்
திருந்துஇரங்கி,
நெஞ்சே!
மெய்ஞ்ஞானம் இன்றி
வினைஇயல்
பிறப்புஅழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும்
ஒழிவுஅற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக்
கண்ணனை
மேவுதுமே.
பொ-ரை :
‘மனமே!
எப்பொழுதும் இருந்து இருந்து வருந்தி உண்மை ஞானமில்லாமல் வினைகளால் உண்டாகின்ற பிறவிகளிலே
மூழ்கி அலைகின்ற நாம், எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து நின்ற உண்மை
ஞானத்தின் உருவமான ஒளியையுடைய கண்ணபிரானை அடைவதற்கு முடியுமோ?’ என்கிறார்.
வி-கு :
‘அழுந்தி அலைகின்ற நாம்’ என்று ‘அலைகின்ற’ என்னும் வினையை வருவித்து ‘அழுந்தி’ என்ற
எச்சத்துடன் கூட்டி முடிக்க. இரண்டாமடியும் நான்காமடியும் ஆசிடையிட்ட எதுகை.
ஈடு : ஏழாம்
பாட்டு. 1‘நின் நன் பொன் சோதித்தாள்’ என்று திருவடிகளின் போக்யதையை நினைத்தவாறே
திருவுள்ளம் பதறத் தொடங்கிற்று; கெடுவாய்! உன் படி ஆராயாமல் நல்லதை ஆசைப்பட்டால் கிடைக்குமோ?’
என்கிறார்.
எஞ்ஞான்றும் நாம்
இருந்து இருந்து இரங்கி - காலமெல்லாம் நாம் இருந்து 2சீழ்கிச் சீழ்கி அழுதால்
என்ன பயனுண்டு
___________________________________________________
1. ‘மெய்ஞ்ஞானமின்றி’
என்றதனைக் கடாக்ஷித்துக் ‘கெடுவாய்! உன் படி
ஆராயாமல்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. சீழ்கி -
விம்மி.
‘பாலரைப்போற்
சீழ்கிப் பரனளவில் வேட்கையால்
காலத்தால் தேசத்தால்
கைகழிந்த - சால
அரிதான போகத்தில்
ஆசையுற்று நைந்தான்
குருகூரில் வந்துதித்த
கோ.’
என்ற இடத்துச் சீழ்கி
என்பது இப்பொருளில் வத்திருத்தல் அறிக.
|