|
நெஞ
நெஞ்சே -
‘உன்னை நீ அறியாயோ? இதற்கு முன்னரெல்லாம் நல்வினை தீவினைகட்குக் காரணமாய்ப் போந்தாய்
அல்லையோ? ஏன்தான்! அற்ப ஆநுகூல்யம் உண்டானால் அடையக்கூடிய பொருளை நாம் பெறுகைக்குக் குறை
என்?’ என்ன, ‘இதுவன்றோ நம்முடைய முன்னைய செய்கை?’ என்கிறார் மேல்: 1மெய்ஞ்ஞானம்
இன்றி - 2பரம்பொருளையறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்; மற்றை ஞானமெல்லாம்
அஞ்ஞானமென்று சொல்லப்படும்’, 3மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய வித்யையே வித்யை;
மற்றையவை தொழில் திறமையைக் காட்டக் கூடியவை,’ என்கிறபடியே, புறம்பே சில ஞானம் உண்டு அத்தனையல்லது
சம்யக் (உண்மை) ஞானமில்லை கண்டாயே. 4ஆமாறு அறிவிலோமே! உண்மை ஞானமில்லாத
அளவேயோ! வினையியல் பிறப்பு அழுந்தி - ‘பாபங்களிலே கொண்டுபோய் மூட்டக் கூடியவான பிறவிகளிலே
அழுந்திச் செல்லும்படியாயன்றோ நம் நிலை இருக்கிறது?’ என்கிறார்.
எஞ்ஞான்றும் எங்கும்
ஒழிவற நிறைந்து நின்ற - எல்லாக் காலத்திலும் எல்லாப்பொருள்களிலும் ஒன்றும் 5பிரிகதிர்ப்படாமல்
குறைவறப் பரந்து நிறைந்து நின்ற. மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை - மெய்யான ஞானச்சோதியையுடைய
கிருஷ்ணனை. ஆத்துமாக்கள் நித்தியப் பொருள்களாய் இருந்தும், ஞானம் வளர்தல் குறைதல்கட்குத்
தகுதியுடையனவாய் இருக்கின்றன; இறைவன் அங்ஙனம் அல்லன் ஆதலின், ‘மெய்ஞ்ஞானச் சோதி’ என்கிறது.
இதனால், ‘நம் நிலையறியாதான் ஒருவனாக நினைத்துக் கிட்டப் பார்க்கிறோமோ?’ என்கிறார்
என்றபடி. 6‘நீ, நான்
_____________________________________________________
1. மெய்ஞ்ஞானம்
இன்றி’ என்கையாலே ‘அற்ப ஆநுகூல்யமும் இல்லை’
என்பது கருத்து. ஆநுகூல்யம் - அநுகூலமுடைமை; அநுகூலம்
- நன்மை.
2. ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5
: 87.
3. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 19 : 41.
4. சம்யக்ஞானம்
இல்லாமையை அறிந்துள்ளமையை விளக்க வந்தது ‘ஆமாறு
அறிவிலோமே!’ என்பது.
5. பிரிகதிர்ப்படாமல்
- தப்பிப்போகாதபடி.
6. பாரதம், சம்பவ
பர். 38 : 29.
|