முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
58

இருந்துதான் கூப்பிடப்பெற்றேனோ!’ என்பார், ‘பாவியேன்’ என்கிறார்.

    அன்று மேவி ஆ நிரை காத்தவன் - 1இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அந்த ஆயர்பாடியைப் பார்த்துச் சிந்தித்தான் கிருஷ்ணன்,’ என்கிறபடியே, நோவு பட்டவன்று ஒரு பசுவின்மேலே ஓர் ஆயன் மேலே ஒரு துளி விழாதபடி, தோன்றியதொரு மலையை எடுத்து உதவி செய்தவனை. இனி, 2மேவி அன்று ஆநிரை காத்தவன்’ என்பதற்கு ‘நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையிலே கோலைத் தந்து ‘பசு மேய்’, என்றால், ‘ரக்ஷகனான எனக்கு இது தக்கதேயன்றோ?’ என்றிருத்தலேயல்லாமல் பெறாப்பேறு பெற்றதாக விரும்பி அன்று பசுக்களை மேய்த்தவன்,’ என்று பொருள் கூறலுமாம். அன்று - அதுவும் ஒரு காலமே!’ என்கிறார். வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால், ‘காட்டிலே வழி திகைத்தார்க்கு அங்கேயுள்ள ஆயர்கள் போலேகாணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும். ‘என்னொருவனையே சரணமாகப் பற்று’ என்று வழிகாட்டினவன் அன்றோ? ‘வழி காட்டினவர்கள் வேறு இலரே?’ என்றது, ‘திருத்தேர்த்தட்டிலே நின்று எல்லா ஆத்துமாக்களும் உய்வு பெறும்படி சரம சுலோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனேயன்றோ?’ என்றபடி. இதனால், ‘ஆபத்துக்கு உதவாதவ

____________________________________________________

  ‘இன்னபல வும்பன்னி இடருறுவா ளிடர்தீர
   என்னுயிர்தான் போகாதோ எனக்கதறு மக்காலை
   வன்னியினும் தூயனாம் வான்மீகி மைந்தர்கள்தாம்
   நன்னுதலாள் அழுமோசை வழிவந்து நண்ணுற்றார்.

  ‘அனகனாம் இராமன் தேவி யென்றும்நீ அமலை என்றும்
   சனகன்மர மகள்நீ என்றும் சமாதியின் உணர்ந்தேன்; தக்க
   உனையவன் காட்டில் விட்டா னல்லன்;என் னுழையே விட்டான்
   எனநினை; யாங்கள் வைகு மிடத்தில்எம் மோடும் போதி.’

(சீதை வனம்புகுபட. 88, 92)

1. ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 11 : 13.

2. ‘மேவி’ என்பதற்கு, ‘வைத்த மனத்தையுடையவனாகி’ என்றும், ‘தன்
  பிரயோஜனத்துக்காக’ என்றும் இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்.
  ‘காத்தவன்’ என்பதற்கும், ‘பாதுகாத்தவன்’ என்றும், ‘பசுக்களைமேய்த்தவன்’
  என்றும் இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்.