|
1
1‘பகவான்
கைவிட்ட பின்னர் யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ? அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று
ஆண்டான் அருளிச்செய்வர்.
கலைப்பல் ஞானத்து
என் கண்ணனைக் கண்டுகொண்டு - 2’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச்
செய்தவனும், வேதங்களையறிந்தவனும் நானே,’ என்கிறபடியே, பல கலைகளாலும் அறியப்பட்ட ஏற்றத்தையுடையனாயிருந்து,
3நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக்
கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டுகொண்டு. என் நெஞ்சம் நிலைப்பெற்று - ‘சிந்தாமற் செய்யாய்’
என்ற நெஞ்சும் ஒரு படி தரிக்கப்பெற்றது. உயிர் நீடு பெற்றது - 4‘வெட்டத்தகாததாய்
எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்துமாவும்’ அழியப்புக்கது; அங்ஙனம் அழியப்புக்க ஆத்துமாவும் இப்போதாயிற்று
அழிவின்மையைப் பெற்றது. ‘ஆயின், ஆத்துமாவிற்கு அழிவு உண்டோ?’ எனின், ‘சேதிக்க முடியாத வேறுபட்ட
சிறப்பினையுடையது’ என்ற இத்துணையேயல்லது, தன்னில் சூக்ஷ்மமாய்ப் புக்கு எங்கும் பரந்து அழிக்க
வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை என்க. இனி நித்திய
___________________________________________________
1. முதலியாண்டான்
நிர்வாஹத்துக் கருத்து, ‘ஸ்வதந்திரனான சர்வேஸ்வரன்
உபேக்ஷித்தால் யமபாதை உண்டாம்,’ என்பது.
இதனை, நித்திய சூரிகளைப்
போன்ற நித்தியானுபவ யோக்கியதை இவருக்கு உண்டாயிருக்கவும்,
பிரிவு
இடையிடையே வருதலைப் போன்று கொள்க. இதனை ஸ்ரீ பரதாழ்வான்
பக்கலிலே கண்டோம்.
‘கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்
படுவதோர்
கொடுமிறைக்கு அஞ்சி
நடுங்கிநான் வந்துன்
திருவடி யடைந்தேன்
நைமிசா ரணியத்துள்
எந்தாய்!’
என்பது, திருமங்கைமன்னன்
திருவாக்கு.
2.
ஸ்ரீ கீதை,
15 : 15.
3. நெடுங்கை நீட்டாக
- அதி தூரமாக.
4.
ஸ்ரீ கீதை,
2 : 24.
|