முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
68

கள

கள்தாம் விளங்கிக் காணப்படுவதும் இங்கேயாகில், இனி 1அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு, பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், 2நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று, இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார். ‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின், இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது; 3‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி? 4உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மனோரதம்.

245

ஒழிவுஇல் காலம்எல்லாம்
    உடனாய் மன்னி
வழுஇலா அடிமை
    செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித்
    திருவேங் கடத்து
எழில்கொள் சோதி
    எந்தைதந்தை தந்தைக்கே.

    பொ-ரை : மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற அழகினைக்கொண்ட ஒளியுருவனான எந்தை தந்தை தந்தைக்கு, எல்லையில்லாத காலமெல்லாம்

___________________________________________________

1. ‘வானவர் வானவர் கோனொடும், சிந்து பூ மகிழும் திருவேங்கடம்’ என்ற
  பகுதியைக் கடாக்ஷித்து, ‘அங்குள்ளாரும்’ என்று தொடங்குகிறார்.

2. ‘நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று’ என்ற
  உவமைக்குத் தக, ‘தெழிகுரலருவி’, ‘தெண்ணிறை சுனைநீர்’, ‘மொய்த்த
  சோலை’ என்ற பாசுரப்பகுதிகளைக் கொணர்ந்து பொருத்துக.

3. ஸ்ரீராமா. அயோத். 31 : 25.

4. ‘உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன்’ என்று தொடங்கும் வாக்கியம்,
  மேலதற்கே காட்டும் வேறு ஒரு லௌகிக திருஷ்டாந்தமாகும்.