முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
7

பெ

    பொ - ரை : மேலான ஒளியுருவானவனே! அறுதியிட்டுச் சொல்லுமிடத்து, நினது திருக்கண்கள் திருவடிகள் திருக்கைகள் இவற்றிற்குத் தாமரை ஒப்பாக மாட்டாது; உருக்கி மெருகு வைத்த நல்ல பொன்னானது உனது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகமாட்டாது; ஆதலால், இவ்வுலகமானது உவமை கூறி உன்னைப் புகழ்வன எல்லாம் பெரும்பாலும் தமது நெஞ்சிலே தோன்றியதை உரைத்தலாய்ப் புல்லியனவாகவே காட்டாநிற்கும்.

    வி - கு : முதலடியில், ‘ஒவ்வா’ என்பது ஈறு கெட்டது. உரைத்தல் - மெருகிடல். ஒட்டு - உவமையுருபு. பட்டுரை - பட்டது உரைத்தல். புற்கு - புன்மை, உலகு - ஆகுபெயர்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘அழகருடைய அழகிற்கு ஒப்பு இல்லாமையாலே உலகத்தார் செய்யும் துதிகள் அங்குத்தைக்குத் தாழ்வேயாமித்தனை,’ என்கிறார்.

    கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா - ‘சொல்லில், தாமரைச் சாதியாக உன்னுடைய திருக்கண்களுக்கும் திருவடிகளுக்கும் திருக்கைகளுக்கும் ஒப்பாக மாட்டாது. அனுபவித்துக் 2குமிழிநீர் உண்டுபோம் இத்துணையே அன்றிச் சொல்லப் போகாது,’ என்பார், ‘கட்டுரைக்கில்’ என்கிறார். கட்டுரைக்கில் - கட்டுரை என்பது ஒரு சொல். ‘தாமரைச் சாதியாக ஒப்பாக மாட்டாது,’ என்பார், அடைகொடுத்து விதந்து கூறாது, வாளா ‘தாமரை’ என்றும், ‘தனித்தனியே ஒவ்வோர் உறுப்புக்குங்கூட ஒப்பாகமாட்டாது’ என்பார், ‘கண் பாதம் கை’ எனத் தனித்தனியாக விதந்தும் அருளிச்செய்கிறார். ‘ஆயின், பாதாதி கேசமாகக் கூறாது, ‘கண் பாதம் கை’ எனக் கூறல் யாது கருதி?’ எனின், குளிர நோக்குவன கண்கள்; நோக்கிற்குத் தோற்று விழுமிடம் திருவடிகள்; விழுந்தவனை எடுத்து அணைப்பன திருக்கைகள். ஆதலின், இம்முறையே ஓதுகிறார். இனி, ‘மேம்பட்ட பத்தியையுடையவனுக்குச் சாஸ்திரமும் இல்லை, முறையும் இல்லை,’ என்பவாகலின், பிரபத்தி நிஷ்டரான இவர் திருவாயிலும் அம்முறை கெட வருகின்றன என்று கோடலுமாம். இனி, மேல் திருப்பாசுரத்தில், முடிச்சோதி அடிச்சோதி கடிச்சோதிகளை

___________________________________________________

1. பாசுரம் முழுதும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘புற்கென்றே
  காட்டும்’ என்ற பகுதியைக் கடாக்ஷித்துத் ‘தாழ்வேயாமித்தனை’ என்கிறார்

2. நீரிலே முழுகுகின்றவர்கள் குமிழி மேலே தோன்றுமாறு தரைமட்டும்
  முழுகுதல்.