முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
73

யிட்டு, ‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு? அவருடைய பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில், தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே. போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; 1அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.

    ‘ஸிரஸா யாசித : - தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ - என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ? ‘மயா-என்னாமல்’ - அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ? ‘ப்ராது: - பின் பிறந்தவன்’ - 2‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி, ‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? எல்லா ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது? ‘தாசஸ்ய - அடியவன்’ - சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பிய

___________________________________________________

1. ‘அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு’ என்றதனை,
  ‘ஒளிதுறந் தனமுகம் உயிர்து றந்தெனத்
  துளிதுறந் தனமுகில் தொகையும் தூயநீர்த்
  தளிதுறந் தனபரி தான யானையும்
  களிதுறந் தனமலர்க் கள்ளுண் வண்டினே.

  ‘நீட்டில களிறுகைந் நீரின் வாய்புதல்
  பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
  ஈட்டில இரைபுனிற் றீன்ற கன்றையும்
  ஊட்டில கறவைகன் றுருகிச் சோர்ந்தவே.’
 

  (கம். அயோத். 205. 212) என வரும் பாடல்களால் உணரலாகும்.

2. ஸ்ரீராமா. அயோத். 97 : 8.