|
1
1‘அப்பரம்பொருள்
ஈசுவரர்களாய் உள்ளவர்கட்கும் மேலான ஈசுவரனாவான்,’ என்று கூறப்பட்டுள்ளதன்றோ? வானவர் வானவர்
கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து - நித்திய சூரிகள், சேநாபதியாள்வானோடு கூட, பிரகிருதி
சம்பந்தமில்லாத மலர்களைக் கொண்டு வந்து, தங்களுக்கும் அப்பாற்பட்டவன் கானமும் வானரமுமான
இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற சௌசீல்ய குணத்தை அநுசந்தித்து நைந்தவர்களாய்ப்
பின்னர் முறைப்படி அருச்சிக்கமாட்டாது அடைவு கெட்டுச் சிந்தாநிற்பர்கள். இங்குள்ளார் அங்கே
சென்று மேன்மையைக் கண்டு அவனுக்கே அடிமைப்படுமாறு போன்று, அங்குள்ளார் இங்கே வந்து அந்நீர்மை
கண்டு ஈடுபடும்படி. மேன்மை அனுபவிக்கலாவது, அந்நிலத்திலே; நீர்மை அனுபவிக்கலாவது, இந்நிலத்திலேயன்றோ!
கொம்பில் நின்ற போதையிற்காட்டிலும், நிலத்திலே விழுந்த போது அந்நிலத்தினுடைய தன்மையாலே
செவ்வி பெற்று மலர்ந்து தோன்றுகிறதாதலின், ‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’என்கிறார்.
அந்தம் இல்
புகழ் - பிரகிருதி சம்பந்தமில்லாத விக்கிரகத்தோடே அவ்வடிமை அனுபவிக்கப் பாங்கான உறுப்புகளையுடையராய்க்கொண்டு
கிட்டினார்க்கு அனுபவ யோக்கியனாயிருக்கையாலே புகழ் ஓரெல்லையோடே கூடியிருக்கும் அப்பரமபதத்தில்;
இங்கு, 2‘ஆளியும் கோளரியும் பொன்மணியும் முத்தமும் பூமரமும்’ ஆனவற்றுக்குத் தன்னைக்
கொடுத்துக்கொண்டு நிற்கையாலே புகழ்க்கு முடிவு இல்லையாதலின், ‘அந்தமில் புகழ்’ என்கிறது.
ஆக, 3‘ஈசுவரன் சமஸ்தமான கல்யாண குணங்களையும் இயல்பாகவேவுடையவன்,’ என்றபடி.
இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் புகழ்க்கு முடிவு உண்டு போலும்!’ என்றவாறு. கார் எழில் - குணமில்லாதவன்
ஆனாலும் விடவொண்ணாதபடியாயிற்று வடிவழகு இருப்பது. அண்ணல் - வடிவழகு இல்லையானாலும், விடவொண்ணாதபடியாயிற்றுச்
சம்பந்தமிருப்பது.
‘வானவர் வானவர்
கோனொடும் சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து அந்தமில் புகழ்க்காரெழில் அண்ணல் - எந்தை தந்தை
___________________________________________________
1.
ஸ்வேதாஸ்வதர
உபநிடதம், 6.
2. நான்முகன் திருவந்.
47.
3. ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 5 : 84.
|