|
தந
தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை; ஆன பின்னர், அங்கே வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்கிறார்.
(2)
247
அண்ணல் மாயன் அணிகொள்செந்
தாமரைக்
கண்ணன் செங்கனி
வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணி றைசுனை
நீர்த்திரு வேங்கடத்து
எண்இல் தொல்புகழ்
வானவர் ஈசனே.
பொ-ரை :
பெருமையுடையவன், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவன், அழகினைக்கொண்ட செந்தாமரையைப்
போன்ற திருக்கண்களையுடையவன், சிவந்த கனி போன்ற திருவதரத்தையும் கரிய மாணிக்கம் போன்ற
வடிவினையுமுடையவன், தெளிந்த நிறைந்த தண்ணீரையுடைய சுனைகள் பொருந்திய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற
அளவிடற்கரிய இயற்கையில் அமைந்த புகழையுடைய, நித்தியசூரிகட்குத் தலைவன் ஆவன்.
வி-கு :
‘தொல்புகழ்’ என்பது ஈசனுக்கு அடை. ‘கருமாணிக்கம்’ என்பது இல்பொருளுவமை.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1‘நாம் இங்ஙனம் அடிமை செய்ய வேண்டும் என்று விரும்புகிற இதுவேயோ வேண்டுவது?
அவன் தான் நமக்கு அனுபவத்தின் நிறைவைத் தருவானோ?’ என்ன, ‘ஆசையற்றவர்கட்குத் தன்னைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறவன், ஆசையோடு கூடிய நமக்குத் தரச் சொல்லவேண்டுமோ?’ என்கிறார்.
அண்ணல் -
‘குறிஞ்சி நிலத்துத்தலைமகன்’ என்னுதல்; ‘எல்லார்க்கும் தலைவன்’ என்னுதல். மாயன் - அழகு
சீலம் முதலியவைகளால் ஆச்சரியங்களையுடையவன். ‘அவற்றில் 2ஓர் அம்மான் பொடி
சொல்லிக்காணீர்,’ என்ன, சொல்லுகிறார்
___________________________________________________
1. ‘வானவர்
ஈசனே’ என்பதனைத் திருவுள்ளம் பற்றி அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘ஆசையில்லாதவர்’ என்றது,
பகவானுடைய அனுபவ ரச
பூர்த்தியைத் திருவுள்ளம் பற்றி.
2. அம்மான் பொடி
- வசீகரண சாதனமான ஒரு வகைப்பொடி. பாலர்களை
வசீகரிக்கைக்காக அவர்கள்மேலே ‘அம்மான்’ என்று
சொல்லி ஒரு பொடி
விசேடத்தைத் தூவினால், அந்தப் பாலர்கள் கள்ளர் பின்னே ‘அம்மான்,
அம்மான்’
என்று சொல்லிக்கொண்டு போவார்கள்; அந்தப் பொடி என்றபடி.
அப்படியே, ஆச்சரியமாக வசீகரிக்கும்
அழகு முதலியவற்றில் ஒன்றனைச்
சொல்லும் என்றபடி.
|