முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
8

அனுபவ

அனுபவித்தார்; இவர் அனுபவத்துக்குப் பாசுரமிட்டுச் சொல்லுவார் ஒருவராகையாலே, அனுபவித்த அம்முறையே ‘கண் பாதம் கை’ என்று இத்திருப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார் என்று கோடலும் ஒன்று. ‘நின்கண்’ என்கையாலே, ‘உனது முகச்சோதி’ என்றதனை நினைக்கிறது; ‘பாதம்’ என்கையாலே ‘அடிச்சோதி’ என்றதனை நினைக்கின்றது; ‘கை’ என்றதனால், ‘கடிச்சோதியை’ நினைக்கின்றது. ஈண்டுக் 1’கை’ என்றது, நடு அனுபவித்த அழகுக்கு உபலக்ஷணம்.

    சுட்டு உரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது - காய்ச்சி ஓடவைத்து உரைத்த நன்றான பொன்னானது உன்னுடைய சுவபாவிகமான திவ்விய விக்கிரகத்தின் ஒளிக்கு ஒப்பாகாது. சாதாரணமான பொன் உவமை சொல்லத் தக்கதன்றாதலின், ‘சுட்டு உரைத்த நன்’ என்று மூன்று அடைகொடுத்து விதந்து ஓதுகிறார், இத்தனை அடை கொடுத்தாலாயிற்று ஒப்பாகச் சொல்லப் 2பாத்தம் போராதது; ‘பரம்பொருள் ஓடவைத்த பொன்னின் நிறமுடையவன்’ என்பது மநு ஸ்மிருதி. ஒட்டு உரைத்து - உனக்கு ஒப்பாகச்சொல்லி. ஒட்டாவது - கூடுகை; அதாவது - சேர்க்கை: 3ஒப்பாயிருத்தல். இவ்வுலகு - காண்கிற இவற்றிற்கு மேற்பட அறியாத இவ்வுலகத்தார். ‘இவ்வுலகத்திலுள்ள பொருள்களின் வைலக்ஷண்யமும் அறியாதவர்கள்’ எனலுமாம். ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று, 4’இவ்வுலகு புகழ்வு’ என்கிறார். உன்னை - சாஸ்திரங்களாலேயே அறியக் கூடியவனாய், அவை தாமும் புகழப்புக்கால், 5’அந்த ஆனந்த குணத்தினின்றும் வாக்குகள் திரும்புகின்றனவோ?’ என்னும்படி மீளும்படியான உன்னை. புகழ்வு எல்லாம் - உள்ளதுஞ்சொல்லி,

____________________________________________________
1. மேற்பாசுரத்தில் அனுபவித்த, ‘கடிச்சோதியை’ உபலக்ஷணத்தால் ஈண்டுக்
  ‘கை’ என்கிறார் என்றபடி.

2. பாத்தம் - விஷயம்.

3. ‘தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே,’ என்ற இடத்து ‘ஒட்டும் என்பது
  உவமச்சொல்’ என்றார், சேனாவரையர். (தொல், சொல். சூ. 70.)

4. ‘இடவாகு பெயர்’ என்றபடி.

5. தைத்திரீய. ஆனந்த. 9 : 1.