முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
80

New Page 1

மேல்: அணிகொள் செந்தாமரைக் கண்ணன் - ‘இக்கண்ணழகு உடையவனுக்கு வேறொரு ஒப்பனை வேண்டா,’ என்னும்படியிருப்பதாய், தனக்குத்தானே ஆபரணமாய், மலர்த்தி செவ்வி குளிர்த்தி நாற்றங்களாலே தாமரையை ஒரு வகைக்கு ஒப்பாம்படி சொல்லலாயிருக்கிற கண்ணழகையுடையவன். இது, முதலுறவு செய்யுங் கண்களைச் சொல்லுகிறது. செங்கனி வாய் - அந்நோக்குத் தப்பினார்க்கும் தப்பவொண்ணாதபடியிருக்கிற புன்முறுவலைச் சொல்லுகிறது. முறுவலாலேயாயிற்று இவரை எழுதிக்கொண்டது. கருமாணிக்கம் - அந்த முறுவலிலே அகப்பட்டாரை மீளாதபடி ஆழங்காற்படுத்தும் வடிவழகைச் சொல்லுகிறது. தெள் நிறை நீர் சுனைத் திருவேங்கடத்து - தெளிந்து நிறைந்துள்ள நீரையுடைய சுனையையுடைய திருமலையிலே. இதனால், இறைவன் வடிவேயன்றித் திருமலையும் சிரமத்தைப் போக்கக்கூடியதாய் இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. ‘ஆயின், விக்கிரக அனுபவத்தை விட்டுச் சுனையை வருணித்தற்குக் காரணம் என்?’ எனின், ‘அணிகொள் செந்தாமரைக் கண்ணன்’ என்றதனோடு, ‘செங்கனிவாய்’ என்றதனோடு, ‘கருமாணிக்கம்’ என்றதனோடு, ‘தெண்ணிறை நீர்ச்சுனை’ என்றதனோடு வேற்றுமையற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு, அதுவும் அந்நிலத்தில் உள்ளதொன்றாகையாலே. எண் இல் தொல் புகழ்- 1‘சிறுவனே! கடலில் இரத்தினங்கள் எப்படி அளவில்லாமல் இருக்கின்றனவோ அப்படியே, மஹாத்துமாவான பகவானுடைய குணங்களும் அளவிறந்தன,’ என்கிறபடியே, கணக்கு இல்லாதவையாய் இயல்பாகவே அமைந்த குணங்களையுடைய. வானவர் ஈசன் - குணங்களை அனுபவிப்பித்து நித்தியசூரிகளையுடைய ஸத்தையை நோக்கிக்கொண்டு செல்லுகிறவன். என்றது, ‘கண்ணழிவற்ற ருசியுடையாரைத் தன்னையனுபவிப்பிக்கும்’ என்கை.

(3)

248

ஈசன் வானவர்க்கு என்பன்என் றால்அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?
நீச னேன்நிறைவு ஒன்றுமி லேன்என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

    பொ-ரை : தாழ்ந்தவனாய்க் குணம் சிறிதுமில்லாதவனான யான், இறைவனைப் பார்த்து நித்தியசூரிகளுக்குத் தலைவன் என்று

________________________________________________     

1. ஸ்வேதாஸ்வதர உபநி. 6.