முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
82

னுக

னுக்கு ஏற்றஞ்சொல்லும்போது தட்டியிலிருந்த காலத்தின் தன்மையையிட்டு ஏற்றஞ்சொல்ல ஒண்ணாதே,’ என்கிறார் என்றவாறு. ‘ஆயின், திருவேங்கடத்தானுக்கு ஏற்றஞ்சொல்லலாவது யாங்ஙனம்?’ எனின், ‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்னவேண்டும்; இது கிடக்க அதனையோ சொல்லுவது?’ என்கிறார்.

    நிறைவொன்றுமிலேன் - தாழ்வினையும் நிறைவில்லாமையையுங்கூட்டி இங்ஙனம் ஆழ்வாராகப் பண்ணிற்று என்கிறாராயிற்று. 1‘தாய்க்கும் மற்றொரு பொருளுக்கும் வேற்றுமை வையாது செயல் புரியும் சென்மம்; சாஸ்திரங்கள் ‘ஆகாதன’ என்று விலக்கியனவற்றைச் செய்து அவற்றினின்றும் மீளமாட்டாமல் போந்தேன்; ‘சாஸ்திர மரியாதையைத் தப்பி நிற்றல் ஆகாதுகாண்’ என்று ஒருவன் சொன்னால், அதனைக் கைக்கொள்ளுந்துணை நெஞ்சில் அறிவில்லாதானொருவன்; அப்படியின்றி, சொல்லுவாரையும் பெற்று, அது நெஞ்சில் படவும் பெற்றதாகில், அதுதன்னை நம்புதல் செய்யாது ‘நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்’ ஆனவன்; நன்மை சொன்னவனுடைய உயர்வினைப் பொறாதவன்; உபகரித்த விஷயத்திலே அதனை இல்லை செய்து அபகாரங்களைச் செய்து போந்தவன்; அபகாரங்களைச் செய்து போதலேயன்றி நன்மை சொன்னவர்களுக்கும் மேலாக என்னை நினைத்துப் போந்தவன்; அறிவுடையார்க்கு மேலாகவும் காமுகர்க்குக் கீழாகவும் நினைத்திருப்பவன்; புறம்பே பறித்துக்கொண்டு வந்து ஒரு பெண் பக்கலிலே சேர்த்து அங்கே திரண்டவாறே அவ்விடந்தன்னில்நின்றும் அபகரிப்பவன்; ‘நம்மை விரும்பினவர்களிடத்தில் வஞ்சனையைச் செய்தோம்’ என்ற இரக்கமுமின்றியிருப்பவன்; இவை தாம் உருவச் செல்லும்படி மேன்மேலெனக்

____________________________________________________

1. ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்று இப்படித் தம்மைத் தாழ்விற்கு
  எல்லை நிலமாகச் சொன்னார் உளரோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
  ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து ‘அமர்யாத:’ என்ற சுலோகத்தை
  எடுத்துக்காட்டி, அதற்குப் பொருளும் அருளிச்செய்கிறார், ‘தாய்க்கும்
  மற்றொரு பொருளுக்கும்’ என்றது முதல், மேன்மேல் எனக் காரியம்
  பார்ப்பவன்’ என்றது முடிய.