|
New Page 1
‘என்கண் பாசம் வைத்த’
என்பதற்கு, 1‘என்னிடத்தில் தன் சம்பந்தமான அன்பை உண்டாக்கினான்’ என்று
பொருள் கூறுவாருமுளர். இனி, மனத்தொடுபடாமலிருக்கவும் மனசுக்காகக் கலந்தானாயிருத்தலன்றி, மனம்
முன்னாகக் கலந்தானென்னுமிடத்தை வடிவிற்பிறந்த புகர் காட்டாநின்றதாதலின், ‘சுடர்ச்சோதி’
என்றும், கலந்த பின்னர் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலே உண்டாயிராநின்றதாதலின்,
‘பரஞ்சுடர்’ என்றும் அருளிச்செய்கிறார் என்னுதலுமாம். ‘பிராட்டியோடே கலந்தாற் போலே
பேரொளிப் பிழம்பாய் இராநின்றான்’ என்றபடி.
(4)
249
சோதி ஆகி,எல்
லாஉல கும்தொழும்
ஆதி மூர்த்திஎன்
றால்அளவு ஆகுமோ,
வேதி யர்முழு வேதத்து
அமுதத்தைத்
தீதுஇல் சீர்த்திரு
வேங்கடத் தானையே?
பொ-ரை :
‘வேதங்களையறிந்த
அந்தணர்களுடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற அமிர்தம் போன்ற இனிமையையுடையவனை,
குற்றமற்ற புகழையுடைய திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்ற பேரொளியுருவனாகி எல்லா உலகத்தாராலும்
தொழப்படுகின்ற முதற்காரணப் பொருளாய் இருக்கின்ற வடிவையுடையவன் என்று கூறினால் அது
பெருமையாகுமோ?’ என்கிறார். ‘ஆகாது’ என்றபடி.
வி-கு :
‘சோதியாகி’ என்பதிலுள்ள
‘ஆகி’ என்னுமெச்சத்தை ‘இருக்கின்ற’ என்னும் வினையைக்கொணர்ந்து அதனோடு முடிக்க. அன்றி, எச்சத்
திரிபாகக் கோடலுமாம்; ‘சோதியாகத் தொழப்படுகின்ற ஆதிமூர்த்தி’ என்க. ‘ஆகுமோ’ என்பதிலுள்ள
ஓகாரம், எதிர்மறை.
ஈடு :
ஐந்தாம் பாட்டு.
2‘நித்தியசூரிகளுக்கும் தன்னைத் தந்தான் என்றது ஓர் ஏற்றமோ எனக்குத் தன்னைத்
தந்தவனுக்கு!’
___________________________________________________
1. ‘என்னிடத்தில்
தன் சம்பந்தமான அன்பையுண்டாக்கினான்’ என்றதன் கருத்து,
ஆழ்வார்க்குத் தன் மாட்டு அன்பை
உண்டாக்கினான் என்பது.
முதற்பொருளில், இறையவன் ஆழ்வாரிடத்தில் அன்பை வைத்தான் என்பது
கருத்து. இரண்டாவது பொருளில் இறைவனாகிய தன்னிடத்தில் ஆழ்வார்க்கு
அன்பை உண்டாக்கினான்
என்பது கருத்து.
2. ‘சோதியாகி
எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால்’ என்னும் இது,
மேல் பாசுரத்தில் ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்
என்கண் பாசம் வைத்த
பரஞ்சுடர்ச்சோதி’ என்றதன் அநுவாதம்.
|