|
என
என்றார் மேல் பாசுரத்தில்;
1‘எனக்குத் தன்னைத் தந்தான்’ என்கிற இதுதான் ஓர் ஏற்றமோ, என்னிலும் தாழ நின்றாரைத்
தேடிப் பெறாதே இருக்கிறவனுக்கு?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
சோதியாகி -
தனக்குமேல் ஒன்று இல்லாத பேரொளியுருவமான திருமேனியையுடையவனாய். 2‘வன்மையுள்ள பேரொளிகளின்
கூட்டமாயுள்ள அந்த விஷ்ணு’ என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். 3‘நீல நிறத்தையுடைய
மேகத்தை நடுவிலேயுடைய மின்னற்கொடி போன்று ஒளியுடன் கூடியதாயும், நீவாரதானியத்தின் வால்
போன்று மெல்லியதாயும், உருக்கிய தங்கம் போன்று காந்தியையுடையதாயும் இருக்கிற ஒரு சிகையிருந்தால்,
அது பரமாத்துமாவின் சரீரத்திற்கு ஒப்பாகலாம்’ என்பது உபநிடதம்.. இதனால், சிரமத்தைப்
போக்கும் வடிவைப் புகர் முட்டாக்கிட்டிருக்கும் என்கையும், அப்புகர்தன்னைச் சிரமத்தைப்
போக்கும் வடிவு தன்னுள் அடக்கிக்கொண்டிருக்குமென்கையும் போதரும். இத்தால், ‘ஒன்றையொன்று
விடாதே இரண்டும் வேறொன்றை வேண்டாதிருக்கும்’ என்றபடி. ஆயினும், ‘நீல நிறத்தையுடைய மேகத்தை
நடுவிலேயுடைய மின்னல் போன்று’ என்று கூறி, ‘உருக்கின தங்கம் போன்று காந்தியையுடையதாய்’ என்றும்
கூறுதலின், ஒளியே விஞ்சியிருக்கும் என்பது போதருதலின், இவரும் ‘சோதியாகி’ என்கிறார்.
எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவாகுமோ - இப்படிச்சொன்னால்தான்
___________________________________________________
1. ‘எல்லா உலகும்
தொழும்’ என்ற இதில் தாம் தொழுதலும் அடங்குமாதலின்,
அதனைத் திருவுள்ளம் பற்றி ‘எனக்குத்
தன்னைத் தந்தான் என்கிற இதுதான்’
என்று அருளிச்செய்கிறார். ‘தீதில் சீர்த் திருவேங்கடத்தான்’
என்றதனைக்
கடாக்ஷித்து, ‘என்னிலும் தாழ நின்றாரைத் தேடிப் பெறாதே இருக்கிறவனுக்கு’
என்கிறார்.
2.
ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 9 :
63. இது,
‘சோதியாகி, என்றதற்குப் பிரமாணம்.
3. ‘ஒளியாகில்
சிவந்தன்றோ இருப்பது? நீல நிறத்தையுடைய திருமேனியைச்
சிவந்த சோதியாகச் சொல்லக் கூடுமோ?’
என்ன, திருமேனிக்கு
நீலநிறமுமுண்டு, ஒளியுமுண்டு: இரண்டும் ஒன்றை ஒன்று விட்டிரா; இரண்டும்
உண்டானாலும்
ஒளியே விஞ்சியிருக்கும் என்னுமதனை வேத
வாக்கியத்தைக்கொண்டு விளக்குகிறார், ‘நீல நிறத்தையுடைய
மேகத்தை
நடுவிலே’ என்று தொடங்கி. இது,
தைத்திரீய நாராயண உபநி.
11. ஆக
இவ்விரண்டு
நிறத்தையும் தனித்தனியே பார்த்தால், ‘இதுவே ஸ்வரூபம்,
இதுவே ஸ்வரூபம்’ என்னும்படி தோன்றும்
என்பதாம். ‘மயிலின்
கழுத்தைப்போன்று இருக்கும்’ என்றபடி.
|