|
அவனுக
அவனுக்கு ஏற்றமாகப்
போருமோ! ‘ஆயின், ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ?’ என்பதற்கு,
முன்னர் ‘எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி’ என்றாரோ?’ என்றது, என் சொல்லியவாறோ?’ எனில்,
‘எண்ணில் தொல்புகழ் வானவ ரீசன்’ என்றவர், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்று அதனையே பின்னும்
கூறியது போன்று, இங்கும் அவ்வாறு சொன்னாரோ?’ என்னில் என்றபடி. 1விழுக்காட்டாலே
சொன்னார். ‘எங்ஙனே?’ என்னில், மேல், தம்மை ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் ‘என்றாரேயன்றோ?
இதனால் தம்மைத் தாழ்வுக்கு இவ்வருகாகச் சொன்னாராவர்; மிகத்தாழ்ந்தவரான தாம் தொழுத
போதே எல்லா உலகங்களும் தொழுதமை விழுக்காட்டாலே பெறுதும்; ‘எல்லாவற்றுக்கும் மேல்படி அமிழ்ந்தது’
என்றால், ‘கீழ்ப்படி மூழ்கினமை’ சொல்ல வேண்டா அன்றே? 2‘கிருஷ்ணனிடத்தில்
பரவசப்பட்டவர்களாய்த் தகுந்தவாறு செயலை அடைந்தனர்’ என்கிறபடியே, தொழக்கடவோமல்லோம்
என்ற நினைவினைச் செய்துகொண்டிருந்தவர்களுங்கூடக் கண்டவாறே தொழுதார்களாதலின், ‘எல்லா
உலகும் தொழும்’ என்கிறார். 3‘பிரஹ்மம் அறியத் தக்கது,’ என்று கூறி, ‘அறியத்
தக்கதான
___________________________________________________
1. விழுக்காடு -
பொருளாற்றல்; அருத்தாபத்தி.
2.
பாரதம், சா பர். 75.
‘சோதியாகையாலே எல்லா உலகும் தொழும்
என்கிறார்,’ என்றபடி.
‘கங்கை மகன்கதி
ரோன்மகன் அம்பிகை காதன் மகன்தனயர்
அங்கவை யின்க ணிருந்த
நராதிப ரடைய எழுந்தடைவே
செங்கை குவித்த
சிரத்தின ராயுணர் வொன்றிய சிந்தையராய்
எங்கள் பிழைப்பினை
இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே.’
(வில்லிபா.
கிருஷ். 211.) என்ற செய்யுள் மேற்காட்டிய சுலோகத்தோடு ஒரு
புடை ஒப்புமையுடையது.
3. ஆதிமூர்த்தியாகையாலே
- காரணவஸ்துவாகையாலே, ‘எல்லா உலகும்
தொழும்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றிக் காரண வஸ்துவே
உபாஸ்யம்
என்கைக்குச் சூத்திரத்தையும், சுருதியையும் அருளிச்செய்கிறார், ‘பிரஹ்மம்
அறியத்
தக்கது’ என்று தொடங்கி. நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர்
மடத்திலே எழுந்தருளியிருக்கச்செய்தே,
‘ஈஸ்வர பரத்துவத்தை
அநுசந்திக்கையாவது, ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கை’
என்றருளிச்செய்தாராம்,
ஆச்சான் பிள்ளை, நடுவில் திருவீதிப்பிள்ளை
பட்டரை ‘பகவத் குணங்களையெல்லாம் சேர அனுபவிக்கலாந்துறை
யாது?’
என்று கேட்டருள, ‘ஜகத் காரணத்துவத்தை அநுசந்திக்கவே எல்லாக்
குணங்களையும் அநுசந்தித்ததாம்’
என்றருளிச்செய்தாராம்.
இம்மணிமொழிகளை இங்கு நினைவு கூர்க.
(தனிப்பிரணவம்.)
|