|
ப
பிறஹ்மத்துக்கு லக்ஷணம்
யாது?’ என்ன, 1எதனிடத்தினின்றும் இந்தப் பூதங்கள் உண்டாகின்றனவோ, எதனால்
உண்டானவை பிழைத்திருக்கின்றனவோ, இவையெல்லாம் அழிந்து பிரளய காலத்தில் எதனை முற்றிலும்
சேர்கின்றனவோ, அதனை அறிவாயாக; அதுதான் பரப்பிரஹ்மம்’ என்பதாக உலகங்களெல்லாம் உண்டாதல்
முதலானவற்றிக்குக் காரணம் பிரஹ்மம் என்று கூறியது. ‘அடையத்தக்க பொருள் யாது?’ என்ன,
2‘காரணமான பொருளே தியானத்திற்கு உரியது என்றும், 3‘எவன் உலகங்களையெல்லாம்
படைப்பதற்கு முன்னே நான்முகனைப் படைத்தானோ, எவன் அந்த நான்முகனுக்கு வேதங்களை உபதேசித்தானோ’
என்றும் உலகங்கட்கெல்லாம் காரணப் பொருளே தியானத்திற்கு உரியது என்று கூறியது. அப்படியே,
இவரும் ‘எல்லா உலகுந் தொழும்’ என்று அடைகின்ற பொருள்களைக் கூறி, ‘ஆதிமூர்த்தி’ என்று
அடையக்கூடிய பொருளை அருளிச்செய்தார்.
இனி, ‘அளவாகாது’
என்று சொல்லும்போதும் சிறிதளவு சொல்லிப் பின்னர், 4‘அந்த ஆனந்த குணத்தினின்றும்
வாக்குகள் மீளுகின்றனவோ என்னும் வேதம் வேண்டாவோ?’ என்கிறார் மேல்; வேதியர் முழு வேதத்து
அமுதத்தை - 5‘அந்த வேதமானது பெரியோர்கட்கு அழிவற்ற தனமாய் இருக்கிறது,’ என்கிறபடியே,
வேதங்களைச் செல்வமாகவுடைய பிராமணருடைய எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற இனிமை மிகுதியையுடையவனை.
6‘பிரஹ்மம் ஆனந்தமானது’, 7‘அந்தப் பிரஹ்மமானது ரச மயமாய்
இருக்கிறது,’ என்பன உபநிடத வாக்கியங்கள். இனி,
_____________________________________________________
1.
தைத்திரீய. பிருகு. 1.
2. அதர்வசிகை.
3. ஸ்வேதாஸ்வதரம்.
4. தைத்திரீய ஆனந்.
9 : 1.
5. யஜூஷி.
வேதியர் முழுவேதத்து அமுதத்தை’
என்பதற்கு இரண்டு வகையில்
பொருள் அருளிச்செய்கிறார்: முதலது, ஸ்வரூபத்தில் இனிமை; இரண்டாவது
குணத்தில் இனிமை.
6. தைத்திரீய. பிருகு. 6
: 1.
7. தைத்திரீய உபநி.
|