|
1
1‘எந்தப்
பரம்பொருளை எல்லா வேதங்களும் சொல்லுகின்றனவோ’ என்றும், 2‘எல்லா வேதங்களும்
எந்தப் பரம்பொருளிடத்தில் ஒரே முகமாய் ஆகின்றனவோ’ என்றும், 3‘எல்லா வேதங்களாலும்
அறியப்படுமவன் நானே’ என்றும் வருகின்றவாற்றால் எல்லா வேதங்களாலும் சொல்லப்படுகின்ற ஆனந்த
குணத்தை யுடையவனை என்னுதல். தீது இல் சீர்த் திருவேங்கடத்தானை - குற்றமற்ற குணங்களையுடையவனை.
சீருக்குத் தீதாவது, அடைகின்ற அடியார்களுடைய குணாகுண நிரூபணம் பண்ணுகை. என்றது, ‘அங்கீகரிக்குமிடத்தில்,
‘இன்னார் ஆவர், இன்னார் ஆகார்’ என்று ஆராயும் குற்றமின்றியிருத்தல்’ என்றபடி.
‘நன்று; மேல்,
4‘எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ?’ என்றதிற்காட்டில்
ஏற்றமாகச் சொன்ன பொருள் என்?’ என்னில், ‘ஈசன் வானவர்க்கு என்பன்’ என்பதைக்காட்டிலும்,
‘என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’ என்ற இடத்தில் ஏற்றங்கண்டோம்; அதைப்போன்று,
‘எல்லா உலகுந்தொழும்’ என்பதனைக் காட்டிலும் ‘தீதில் சீர்த்திருவேங்கடத்தான்’ என்ற இடத்தில்
ஏற்றம் யாது?’ எனின், ‘என்னை அங்கீகரித்தான் என்ற இது ஒரு ஏற்றமோ? என்னைக்காட்டிலும் தாழ்ந்தாரைத்
தேடிக் கிடையாமையாலே பட்டினி விட்டு, 5‘பெருமாள் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ
என்ற ஆசையினால் இருந்தேன்’ என்பது போன்று, காலத்தை எதிர்நோக்கிக்கொண்டு நிற்கின்றவனுக்கு.
‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘நீசனேன் நிறைவொன்றுமிலேன்’ என்ற இவருடைய குற்றங்களைக்
குணமாகக்கொண்டு அங்கீகரித்து, இவருக்கு அவ்
________________________________________________
1. கடோபநிடதம், 1. 2
: 15.
2. தைத்திரீய ஹோதாரே.
ஆர. பிர. 3.
3. ஸ்ரீகீதை, 15 :
15.
4. எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி’ என்றதனைக்காட்டிலும் ‘தீதில் சீர்’
என்கிற இடத்தில் ஏற்றம் சொல்லுகைக்காகப்
பொதுவான சங்கையை
அநுவதிக்கிறார், ‘எல்லா உலகும் தொழும்’ என்று தொடங்கி.
5.
ஸ்ரீராமா.
அயோத். 59 : 3.
இது, சுமந்திரன் கூற்று.
|