|
வ
வருகு குற்றமுடையாரைத் தேடிக்
கிடையாமையாலே நிற்கிறான் என்பதனைத் தெரிவித்தமையால், அவ்வாறு நிற்றலே ஓர் ஏற்றம் என்க.
இனி, பாதுகாக்கிறவனுக்குப் பாதுகாக்கப்படும் பொருள் பெற்ற அளவிற்கு மனநிறைவு வருதல் பாதுகாத்தலுக்குக்
குற்றமாமாதலின், ‘தீதில்சீர்’ என்கிறார் என்னுதல்; 1‘க்ஷத்திரியன் பெற்றதைக்கொண்டு
திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்,’ என்பது பொதுவான தர்மம்.
(5)
250
வேங்க டங்கள்மெய்
மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு
நல்லன வேசெய்வார்,
வேங்க டத்துஉறை
வார்க்கு நமஎன்னல்
ஆஅங் கடமை
அதுசுமந் தார்கட்கே.
பொ-ரை :
‘திருவேங்கடத்தில்
எழுந்தருளியிருக்கின்றவர்க்கு வணக்கம்,’
என்று சொல்லுதல் எளிதில் செய்யக்கூடிய காரியமாம்;
அதனைச் சுமந்தவர்கட்கு, தீர்க்கக்கூடிய கடன்களும் சரீர சம்பந்தம் காரணமாக வருகின்ற நல்வினை
தீவினைகளும் வெந்து அழிந்துவிடும்; அடியார்களாகிய தாங்கள், தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே
செய்வார்கள்.
வி-கு :
‘கடங்கள் மெய் மேல்
வினை முற்றவும் வேம்,’ என மாறுக. கடன் - கடம்; னகரத்திற்கு மகரம் வந்தது. ‘கள்’ பன்மையையுணர்த்த
வந்தது. ‘சுமந்தார்கட்கு வேம்’ எனக் கூட்டுக.
ஈடு : ஆறாம்
பாட்டு : 2மேல், திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்தார்; அங்கு அருளிச்செய்யாததான
‘நம:’ பதத்தின் பொருளை இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார். ‘இறைவன் பாதுகாக்கப்படுகின்ற
பொருள்களைப் பெற்ற அளவைக் கொண்டு மனம் நிறைவு பெறாதவனாகவிருந்தாலும், நாம் ஆசை
___________________________________________________
1. சுலோகத்தின்
பொருள் முற்றும் வருமாறு :- ‘பிராஹ்மணன் பெற்றதற்கு
மகிழானாயின், நஷ்டமடைவான்; அப்படியே,
க்ஷத்திரியன் பெற்றதைக்
கொண்டு திருப்தியடைவானாயின் நஷ்டமடைவான்; பொதுமகள்
நாணத்தையுடையவளாயின்
நஷ்டமடைவாள்; நற்குலப்பெண் நாணத்தை
விடுவாளாயின் குற்றமுடையவளாவள்,’ என்பது,
2. ‘மேல்’ என்றது
முதல் ‘அருளிச்செய்கிறார்’ என்றது முடிய,
இத்திருவாய்மொழியின் முதற்பாசுரத்தோடு சங்கதி.
‘மேல்’ என்றது, ‘ஒழிவில்
காலமெல்லாம்’ என்னும் பாசுரத்தை. ‘இறைவன்’ என்றது முதல்
‘ஆசையுடன்
கூடினவர்களாகவிருந்தாலும்’ என்றது முடிய, மேல் பாசுரத்தோடு சங்கதி.
|