|
முற
முற்றவும் வேம் - நசிக்கும்
என்றபடி. 1இங்ஙனம் ஆளவந்தார் அருளிச்செய்வர். இதனை, எம்பெருமானார்
கேட்டருளி, ‘இதற்கு, வேதாந்தத்திற்சொல்லுகிற கட்டளையிலே பொருள் சொல்ல அமையாதோ?’
என்று இங்ஙனம் அருளிச்செய்வர். அதாவது, 2‘ஞானத்தையடைந்தவுடன் (ஞானத்தின் மஹாத்மியத்தாலே) உத்தர பூர்வாகங்களில், உத்தராகத்திற்குச் சம்பந்தப்படாமலிருத்தலும், பூர்வாகத்துக்கு நாசமும்
உண்டாகும்’ என்றும், 3‘இந்த விதமாகச் செய்கின்ற வேதாந்த ஞானமுடையானுக்கு எல்லாப்
பாவங்களும் நெருப்பிற்போடப்பட்ட துய் போன்று அழிகின்றன; ஆச்சரியம்’ என்றும்
சொல்லுகிறபடியே ‘வேம்’ என்கையாலே பூர்வாகத்துக்கு அழிவும், உத்தராகத்துக்குச் சம்பந்தியாமற்போய்விடுகையும்
சொல்லுதல். அன்றி, பூர்வாகத்துக்குச் சொன்ன அழிவுதானே உத்தராகத்துக்கும் உபலக்ஷணமாய், சம்பந்தியாமற்போதலைச்
சொல்லிற்றாகவுமாம்.
__________________________________________________
1. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்தில்
‘கடங்கள்’ என்றது, கடனைக் குறித்தது;
‘மெய் மேல் வினை முற்றவும்’ என்றது, பூர்வோத்தராகங்களைக்
குறித்தது;
மெய் - சரீரம். எம்பெருமானார் நிர்வாஹத்தில் ‘கடங்கள்’ என்றது, கடன்
போலே அவசியம் அனுபவிக்கத் தக்கவைகளைச் சொல்லி, ‘மேல் வினை
முற்றவும்’ என்றது, உத்தராகத்தைச்
சொல்லுகிறது. மெய் - சத்தியம் என்பது
பொருளாம். எம்பெருமானாருடைய நிர்வாகம் இரண்டு வகை:
‘அதாவது,
ஞானத்தையடைந்தவுடன்’ என்றது முதல் ‘சம்பந்தியாமற் போய்விடுகையும்
சொல்லுதல’ என்றது
முடிய ஒரு வகை. ‘பூர்வாகத்துக்குச் சொன்ன
அழிவுதானே’ என்றது முதல் ‘சம்பந்தியாமல் போதலைச்
சொல்லிற்றாகவுமாம்’ என்றது முடிய இரண்டாவது வகை.
2. பிரஹ்ம சூத்திரம்,
4. 4 : 13.
3. சாந்தோக்கிய
உபநிட. 5 : 25.
இவ்விடத்தில்,
‘போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்
செப்பேலோ ரெம்பாவாய்’
என்னும் ஆண்டாள் ஸ்ரீ சூக்தியையும்,
‘சாரக் கடவனவாய் நின்ற
துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின், உயிரான் அளவின்றி
ஈட்டப்பட்ட
வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான்
அனுபவித்தனவும் பிறந்த உடம்பான் முகந்து நின்றனவும்
ஒழியப் பின்னும்
அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல
ஞான யோகங்களின் முன்னர்க் கெடுதலான்,
‘அழித்துச் சார்தரா’ என்றார்;
மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும்
என்றார்; ‘அஃது
|