|
பூர
பூர்வாகமாவது -
ஞானம் பிறப்பதற்கு முன்பு புத்தி பூர்வகமாகச் செய்து போந்த தீவினைகள். உத்தராகமாவது - ஞானம்
பிறந்த பின்பு அஜாக்கிரதையால் செய்து போந்த தீவினைகள். ‘ஆயின், பிரபந்நனுக்கு உத்தராகம்
வருவதற்குக் காரணம் உண்டோ?’ எனின், ஞானம் பிறந்த பின்பும் விரோதியான சரீர சம்பந்தம்
தொடர்ந்து வருகையினாலே பாவங்களிலே செல்லுவான்; பின்னர், ஞானம் பிறந்து, கடுக மீண்டு முன்பு
செய்ததற்கு ‘நாம் என் செய்தோமானோம்!’ என்று கழிவிரக்கங்கொண்டு வருந்துவான். கடங்கள் மேல்
வினை முற்றவும் வேம்; இது மெய்-சத்தியம். ‘இப்படிச் செய்கின்றவனுடைய எல்லாப் பாவங்களும்
அழிகின்றன ‘என்பது உபநிடத வாக்கியம். ‘ஆயின், உபநிடதம் கூறின், அது மெய்யாக வேண்டுமோ?’
எனின், பிரத்தியக்ஷம் முதலிய பிரமாணங்கள் திரிபுணர்ச்சிக்குக் காரணமாய் அவ்வுணர்ச்சியை
நீக்குவதாயுமிருக்கும்; அவ்வாறு அன்றி, ‘உண்மையை உள்ளவாறே கூறுவது சாஸ்திரம்,’ என்கிறபடியே,
சாஸ்திரம் சொல்லிற்று என்றால் அவ்வர்த்தம் மெய்யாக இருக்குமன்றோ?
‘ஆயின், மேல்
வினை முற்றவும் சாராவாகில், அவற்றிற்குப் போக்கடி என்?’ எனின், 1கடலுக்குத் தொடுத்த
அம்பை, அவன் நாலடி வர நின்றவாறே, அச்சமயத்திலேயே ‘உன் விரோதிகளைச் சொல்லாய்’ என்றார்
அன்றோ? இவ்விடத்திலே பட்டர் ஒரு ஐதிஹ்யம் அருளிச்செய்வர்: ‘பண்டு தலையில் மயிர் இல்லாதான்
___________________________________________________
அறும்வழிக் கிடந்த துன்பங்கள்
எல்லாம் என் செய்யும்?’ என்னும் கடாவை
ஆசங்கித்து, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய
உயிரைச்
சாரமாட்டாமையானும், வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் என்பது
இதனாற் கூறப்பட்டது,’
என்னும் பரிமேலழகர் உரையையும் ஒப்பு நோக்கி
மகிழ்தல் தகும்.
(திருக்குறள், 358)
1. ‘கடலுக்குத் தொடுத்த
அம்பை’ என்று தொடங்கும் வாக்கியத்தால் இவன்
செய்த பாவங்களைப் பொறுத்தல் மாத்திரம் அன்றிக்கே
பகைவர்கள் மேலும்
போக்குவான் என்பதனைத் தெரிவித்தபடி. வணங்கிய மாத்திரத்தில் இவன்
பண்ணின
பாவங்களையெல்லாம் மறப்பான் இறைவன் என்பதற்கு ஓர்
ஐதிஹ்யம் அருளிச்செய்கிறார். ‘இவ்விடத்திலே
பட்டர்’ என்று தொடங்கி.
‘இவ்விடத்திலே’ என்றது, அவன் நாலடி வர நின்றவாறே, அச்சமயத்திலேயே
‘உன் விரோதிகளைச் சொல்லாய்’ என்ற இடத்தில் என்றபடி.
இச்சரிதப்பகுதியைக் கம்பராமாயணத்தில்
யுத்தகாண்டத்தில் வருணனை வழி
வேண்டு படலத்தில், 64 முதல் 80 முடிய உள்ள செய்யுள்களில் காண்க.
|