|
ஒ
ஒருவன் நெல் அளந்துகொண்டு
நின்றான்; அங்கே ஒருவன் சென்று, ‘மயிரைப் பேணாமல் நீர் தனியே நின்று நெல் அளக்கிறீரே!’
என்ன, ‘வந்தது என்!’ என்ன, ‘ஒன்றுமின்று; கண்டு போக வந்தேன்,’ என்ன, ஆகில், ‘ஒரு கோட்டையைக்
கொண்டு போகலாகாதோ?’ என்று எடுத்துவிட, அவன் அதனைக்கொண்டு வருகின்ற காலத்தில் எதிரே
ஒருவன் வந்து, ‘இது பெற்றது எங்கே?’ என்ன, ‘உன்தனை மொட்டைத் தலையன் தந்தான்’ என்ன, அவன்
சென்று அங்கேயுள்ள அவனைக் கண்டு, ‘இன்னான் உம்மை வைது போகின்றானே!’ என்று அதனைக் கூற,
‘அடா! என் நெல்லையுங்கொண்டு என்னையும் வைது போவதே!’ என்று தொடர்ந்து வர, அவன் திரும்பிப்
பார்த்து, ‘ஏன்தான் குழல்கள் அலைய அலைய ஓடி வாராநின்றாய்?’ என்ன, ‘ஒன்றுமின்று, இன்னம்
ஒரு கோட்டை கொண்டுபோகச் சொல்ல வந்தேன்,’ என்றானாம்; அப்படியே, கடலை முகங்காட்டுவித்துக்கொள்ளுகைக்காகக்
காலைப் பிடிப்பது கோலைத் தொடுப்பதாகாநிற்க, அவன் வந்து முகங்காட்டினவாறே, ‘உனக்கு அம்பு தொடுத்தோம்’
என வெட்கி, ‘உன் பகைஞரைச் சொல்லு, நாம் இதனை விட’ என்றார் அன்றோ?
இனி, முதற்பாசுரத்திலே
1சொல்லாமல் விடப்பட்டதொரு பொருளைச் சொல்லுகிறார் மேல்: தாங்கள் - மற்றை
விஷயங்களில் விரக்தராய்க் கைங்கரிய ருசியுடையராயிருக்குமவர்கள். தங்கட்கு - இப்படிப்பட்ட
ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு. நல்லனவே செய்வார் - தங்கள் சொரூபத்தோடு சேர்ந்த கைங்கரியத்தையே
செய்வார்கள். ‘ஆக, இதனால், பலத்தை அனுபவிக்கிறவனுக்குப் பலத்தைப் போன்று விரோதி கழிதலைப்
பிரார்த்தித்துப் பெறவேண்டியிருக்குமோ?’ என்னில், ‘அது வேண்டா; தாங்கள் தங்களுக்கு நன்றான
கைங்கரியத்தைச் செய்யாநிற்க அமையும்; இவ்விரோதி தன்னடையே போம்,’ என்கிறார் என்றபடி.
‘ஆனால், தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார் என்பதற்கு, ‘தங்களுக்கு நல்லவையாய்த் தோற்றியவற்றைச்
செய்வார்கள்’ என்று பொருள் கூறின் என்னை?’ எனின், அங்ஙனங்கூற ஒண்
___________________________________________________
1. சொல்லாமல் விடப்பட்டது,
‘நம:’ பதம். இதன் பொருளை இங்குச்
சொல்லுகிறார் என்றபடி.
|