|
ண
ணாதே! ‘வழுவிலா அடிமை
செய்ய வேண்டும் நாம்’ என்கிற 1அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. அதிகாரி
வைலக்ஷண்யமும் செய்கையின் வைலக்ஷண்யமும் தோன்றும்படி ‘தாங்கள் தங்கட்கு’ என இங்ஙனே
ஊன்றிச் சொல்லுமாம் அனந்தாழ்வான். ‘நன்று; ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’
என்கிறது, இவர்களை 2எங்ஙனேயாக நினைத்து?’ எனின், வேங்கடத்து உறைவார்க்கு நம
என்னல் ஆம் கடமை அது சுமந்தார்கட்கே - ‘வேங்கடத்துறைவார்க்கு’ இதனால், நான்காம் வேற்றுமையின்
அர்த்தம் சொல்லப்படுகிறது; ‘நம:’ - எனக்கு அன்று, அவனுக்கு என்றபடி. என்னல் - இது தான் நெஞ்சில்
உண்டாக வேண்டா; சொல்லளவே அமையும்; ‘இதுதான் சிறியதாய் இருப்பினும் இவன்தனக்குச் செய்தற்கு
அருமையாக இருக்குமோ?’ எனின், ஆம் - மிக எளிதான காரியம். ‘எளிது எனின் சொரூபத்தோடு சேராததாயிருக்குமோ?’
என்னில், கடமை - செய்யத்தக்கது. அது சுமந்தார்கட்கு - பெறுகிற பேற்றின் கனத்தையும் இவனுடைய
முயற்சியின் சிறுமையையும் பார்த்து, ‘இப்பேற்றுக்கு இவன் இம்மலையைச் சுமவானோ?’ என்பாரைப்போன்று
‘அது சுமந்தார்கட்கு’ என்கிறார். இது, பெறுகிற பேற்றின் கனத்தையும் பகவானுடைய திருவருளையும்
அறிந்திருக்கிற இவர்தம் கருத்தாலே சொல்லுகிறாராதல்; இவன் பக்கலுள்ளதைக் கனக்க நினைத்திருக்கும்
இறைவன் கருத்தாலே
___________________________________________________
1. ‘அதிகாரியைக்
குறித்துச் சொல்லுகையாலே’ என்றது, உத்தேஸ்யமும்
அதிகாரிக்குத் தகுதியாக இருக்கவேண்டுமே என்பது
கருத்து.
2. ‘எங்ஙனேயாக நினைத்து’
என்றது, ‘எந்தச் சாதனங்களைச் செய்தவர்களாக
நினைத்து’ என்னுதல்; ‘எந்த அதிகாரிகளாக நினைத்து’
என்னுதல். ‘நம:’
என்ற சொல்லைப் பற்றி இதனை அருளிச்செய்கிறார். ‘நான்காம்
வேற்றுமையின்
அர்த்தம் சொல்லப்படுகிறது’ என்றது, ‘பிரணவத்தின் முதல்
அக்ஷரமான அகாரத்திலே ஏறிக் கழிந்த
நான்காம் வேற்றுமையின் பொருள்
சொல்லப்படுகிறது,’ என்றபடி. நான்காம் வேற்றுமையின்
பொருள்,
அகாரவாச்சியனான எம்பெருமானுக்கே அடிமை என்பது; ‘இதில் அகரம் சகல
சப்தத்துக்கும்
காரணமாய், நாராயண சப்தத்துக்குச் சங்கிரஹமாயிருக்கையாலே,
சகல ஜகத்துக்கும் காரணமாய், சர்வ
ரக்ஷகனான எம்பெருமானைச்
சொல்லுகிறது’, ‘இதிலே சதுர்த்தி ஏறிக் கழியும்’, ‘சதுர்த்தி ஏறினபடி
என்?’
என்னில், ‘நாராயண பதத்துக்குச் சங்கிரஹமாயிருக்கையாலே’, ‘இத்தால்
ஈஸ்வரனுக்குச் சேஷம்
என்கிறது,’ என்பன முமுட்சுப்படி, 35, 48-51.
|